களை எடுப்பது பிரதம அரசனின் கடமை

ஒரு விவசாயியின் முக்கியமான பணி ”களை” எடுப்பதாகும்! , அதேப்போல ஒரு அரசனுக்கும் முக்கியமான பணி குற்றவாளிகளை ஒழிப்பது! நம் நாட்டில் இப்போதைய அரசன் யார்? பிரதமர்தான் அரசன்! நாட்டில் குற்றவாளிகள் யார்? பொருளாதார குற்றவாளிகளே நாட்டின் முக்கியமான குற்றவாளிகள்! களை இருக்கும்வரை பயிர் வளரமுடியாது. அதேபோல பொருளாதார குற்றவாளிகள் இருக்கும்வரை, நாடு முன்னேறமுடியாது, அதாவது நாட்டில் உள்ள நல்லவர்கள் முன்னேறமுடியாது!

    நல்லவர்கள் முன்னேறவேண்டுமானால் பொருளாதார குற்றவாளிகள் ஒழிக்கப்படவேண்டும்! நாட்டில் பொருளாதார குற்றவாளிகள் யார்? கள்ளப்பணம் வைத்திருப்போரும் கறுப்புப்பணம் வைத்திருப்போரும்தான் பொருளாதார குற்றவாளிகள்! இவர்கள் தான் ஒரு நாட்டின் களைகள்! இவர்களை அழிக்காமல் நாடு முன்னேற முடியாது! எனவேதான் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கள்ளப்பணம் மற்றும் கருப்புபணம் ஒழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டார்!

     கள்ளப்பணம் என்பது திருட்டுத்தனமாக அச்சடிக்கப்பட்ட பணம்! பாகிஸ்தான் வங்காளப்பிரதேஸ் முதலிய நாடுகளில் இந்தியப்பணம் அச்சடிக்கப்பட்டு இந்தியாவுக்கு கட்த்தப்படுவதாக செய்திகள் உள்ளன! பணம் அச்சிடும் ரிசர்வ் பேங் அச்சியின் நுனுக்கங்கள்கூட  காங்கிரஸ் ஆட்சியின்போது வெளிநாடுகளுக்கு திருட்டுத்தனமாக விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் உள்ளன!

     கருப்புப்பணம் என்பது வரிகட்டாமல் சேர்த்துவைத்திருக்கும் பணம்!

    2016 ம் ஆண்டி நவம்பர் மாதம் எட்டாம் தேதி இரவு எட்டு மணிக்கு ஒரு அற்புதமான அறிவிப்பு பிரதமர் அவர்களால் வெளியிடப்பட்டது! “இன்று இரவு 12 மணிமுதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது! உங்களிடம் இருக்கும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து வேறு ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்” என்பதுதான் அந்த அறிவிப்பு!

     இந்த பணம் செல்லாது ஆனால் அதே மதிப்புடைய வேறு பணம் தந்துவிடுகிறோம் என்பதுதான் அறிவிப்பு! இதில் யாருக்கும் எந்த இழப்பும் இல்லை! வங்கியில் மாற்றிக்கொள்ளவேண்டும் அவ்வளவுதான்! ஒரு நபர் இரண்டு லட்சத்திற்குமேல் வங்கியில் செலுத்தி மாற்றுப்பணம் வாங்க விரும்பினால், அந்த பணத்தை அவர் எப்படி சம்பாதித்தார் என்னும் விவரத்தை தெரிவிக்கவேண்டும்! கொள்ளையடித்த பணம் வைத்திருப்பவனும் கல்ளப்பணத்தை வைத்திருப்பவனும் கருப்புப்பணம் வைத்திருப்பவனும் எப்படி கணக்கு சொல்லமுடியும்? சொன்னால் விலங்கு வருமே!  இதுதான் பிரதமர் நரேந்திரமோடி பொருளாதார குற்றவாளிகளை ஒழித்த விதம்! ஒரு அரசன் எதை செய்யவேண்டுமோ அதை செய்துவிட்டார் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள்!

     இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொருளாதார குற்றவாளிகள்தான் இன்று மோடியை எதிர்த்து அரசியல் செய்கிறார்கள்! பச்சைப் பொய்யை ஊடகத்தில் சொல்கிறார்கள் பத்திரிக்கையில் எழுதுகிறார்கள் அரசியல்வாதிகள் மேடைகளில் பேசுகிறார்கள்!

     இனி எத்தகைய பொய்யினை வீசுகிறார்கள் என்பதை பார்ப்போம்!

 

      (1) ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்தியது திமுகவும் காங்கிரசும்! அவர்கள், மாடுகளை காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால்தான் , நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது! எனவே ஜல்லிக்கட்டை தடுத்தது, திமுகவும் காங்கிரசும்தான்!

     ”காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் மாடுகள் சேர்க்கப்பட்டிருந்தாலும் ஜல்லிக்கட்டு விளையாட்டு ஒரு பாரம்பரிய கலாச்சார விளையாட்டாக இருப்பதால், ஜல்லிக்கட்டு விளையாடிக்கொள்ள தடையேதும் இல்லை” – என்னும் வாசகத்தில் பாஜக அரசு ஒரு அரசானையை வெளியிட்டு ஜல்லிக்கட்டு விளையாட பச்சைக்கொடி காட்டியது! அதற்கும் திமுக காங்கிரஸ் ஆதரவாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்று மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தார்கள்!

    மத்திய பாஜக அரசு அதோடு விட்டுவிடாமல் மாநில அரசை ஒரு சட்டம் இயற்றச்சொல்லி, அதற்கு உடனேயே ஒப்புதல் வழங்கி ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டுவந்தது! இந்த அளவுக்கு ஜல்லிக்கட்டுக்கு முழு ஆதரவாக இருக்கும் பாஜகவை, ஜல்லிக்கட்டுக்கு எதிரான கட்சிஎன்று ஊடகங்களும் பத்திரிக்கைகளும், அரசியல் தலைவர்களும் சொல்லிவருகிறார்கள்!

     (2) நம் நாட்டில் நிர்வாகங்கள் மூன்று உள்ளன! ஒன்று உள்ளாட்சி நிர்வாகம், மாநில நிர்வாகம், மத்திய ரிர்வாகம்! மாநில அரசின் உடன்பாடும் விருப்பமும் இல்லாமல் உள்ளாட்சி நிர்வாகம் ஒரு திட்டத்தை செயல்படுத்தமுடியாது! அதேபோல உள்ளாட்சி நிர்வாகத்தின் விருப்பமும் உடன்பாடும் இல்லாமல் மாநில அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியாது!

     மாநில அரசின் விருப்பமும் ஒப்புதலும் எழுத்து பூர்வமான பதிவுகளும் இல்லாமல் மத்திய அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியாது! இதுதான் இந்திய அரசியல் அமைப்பு சட்டம்! நிலத்தடியில் இருக்கும் கனிமங்களை எடுத்து பயன்படுத்துவது என இந்திய சுதந்திரத்தை தொடர்ந்து முடிவு செய்யப்பட்டது! அப்போதிலிருந்தே சுரங்கங்களும் கிணறுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன! தமிழகத்தில் 173 எண்ணை மற்றும் எரிவாய்வு கிணறுகள் உள்ளன! அதில் 103 கிணறுகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது! இதில் எந்த கிணறும் பாஜக ஆட்சிக்காலத்தில் முடிவு செய்யப்பட்டு துவக்கப்பட்டது அல்ல! துவங்கியது மத்திய காங்கிரஸ் அரசும் மாநில திமுக மற்றும் அதிமுக அரசுகளும்தான்! அரசுகள் மாறினாலும், முந்திய அரசின் பணிகளை வருகின்ற அரசு தொடர்ந்து செய்யவேண்டும் என்பதுதான் சட்டம் சொல்வது! பாஜக அரசு தொடர்ந்து செய்யும்போது அந்த திட்டத்தை துவக்கிய திமுக காங்கிரஸ் கட்சிகளே தங்களின் திட்டங்களை எதிர்த்து போராடுகிறார்கள்! மக்களை தூண்டிவிட்டு போராடச்சொல்கிறார்கள்!

     பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பொருளாதார குற்றவாளிகளை அழித்து நல்லவர்களை காப்பாற்ற முயற்சிப்பதால்தான் நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் போராட்டங்கள் தூண்டப்படுகின்றன! எண்ணைக்கிணறுகளால் நிலத்தடி நீருக்கும் விவசாயத்திற்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என விஞ்ஞானிகளும் விவரம் தெரிந்தோரும் சொன்னாலும்கூட போராட்டம் தூண்டப்படுகிறது!

     (3) கர்நாடக அரசின் ஒப்புதல் இல்லாமல் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கமுடியாது! கர்நாடக அரசு தரும் உறுப்பினர்களையும் கொண்டுதான் காவிரி ஆணையம் அமக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது! கர்நாடக அரசு ஒத்துக்கொள்ளாத நிலையில் எப்படி ஆணையம் அமைக்கமுடியும்? கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது! காங்கிரசிடம் கேட்கவேண்டிய கேள்வியை பாஜகவிடம் கேட்கிறார்கள்! இதுவும் பொருளாதார குற்றவாளிகளின் செயல்தான்! 120 ஆண்டுகால காவிரிப்பிரச்சினையை இப்போதுதான் பாஜக ஆட்சிக்குவந்தபிறகு தோன்றிய பிரச்சினைப்போல பேசுகிறார்கள்! காங்கிரஸ் அரசுதான் தண்ணீர் விடவில்லை என்றாலும் பாஜகவை குற்றம் சாட்டுவதன் காரணம் பொருளாதார குற்றவாளிகள்தான்!

     (4) மீனவர்கள் இலங்கை கடல்பகுதியில் மீன்பிடிக்கும் பிரச்சினை என்பதும் நீண்டநாளைய பிரச்சனை! ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகுத்தான் மீனவர் பிரச்சினை தோன்றியதுபோல் பாஜகவை குற்றம்சாட்டுவது ஏன்? நம் நாட்டின் கடல்பகுதியில் இன்னொரு நாட்டினர் வரக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கும்போது, நாம் இன்னொரு நாட்டின் எல்லைக்குள் நுழையலாம் என்று எப்படி சொல்லமுடியும்? நமக்கு மட்டும் தனியாக சர்வதேச சட்டத்தை திருத்தமுடியுமா? பேட்சிவார்த்தை மூலமாக ஒரு நல்லமுடிவினை எட்டிட மத்திய பாஜக அரசு முயலுகிறது! ஆனால் இந்த விசயத்தில் பாஜக வை குற்றம்சாட்டுவது பொருளாதார குற்றவாளிகளால் தூண்டிவிடப்படும் செயலாக இருக்கிறது!

     இந்திய பொருளாதாரத்தை இதுவரையில் சீர்குலைத்துக்கொண்டிருப்பதும், பல குற்றங்களுக்கு காரணமாக இருப்பதும், காசு கொடுத்து வாக்கு வாங்குவதும் இந்த பொருளாதார குர்றவாளிகளே!

     (1) ஊடகங்களையும் (2) பத்திரிக்கைகளையும் (3) அரசியல்வாதிகளையும் தங்களின் பணபலத்தால் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் இந்த பொருளாதார குற்றவாளிகளை ஒழிக்காமல் இந்தியா முன்னேற முடியாது! மேலே சொன்ன மூன்றுவகையானவர்களில் சிலர் தாங்களே பொருளாதார குற்றவாளிகளாகவும் உள்ளனர்.

     இந்திய அரசிடம் இருக்கும் பணம் மற்றும் சொத்துக்களைவிட இவர்களிடம் அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது! தகாதமுறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை கையகப்படுத்த பினாமிசொத்து பறிமுதல் சட்டம் வருவதாகவும் பிரதமர் மோடி அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

     பிரதமர் நரேந்திரமோடி அவர்களும் பாஜகவும் எதற்காக இந்த பொருளாதார குர்றவாளிகளுக்கு எதிராக துணிச்சலோடு போராடுகிறார்கள் என்றால், மக்களுக்காகத்தான்! நல்லவர்களுக்காக நேர்மையானவர்களுக்காக பிரதமர் போராடுகிறார்! எனவே பிரதமரையும் பாஜகவையும் ஆதரித்து வாக்களிக்கவேண்டியது நேர்மையாளர்களின் கடமையாகும்!

–    குமரிகிருஷ்ணன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...