வரும் 2025-26ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என பார்லிமென்டில் இன்று (ஜன.,31) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை (பிப்.,01) 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜன.,31) பார்லிமென்டில் சமர்ப்பித்தார். பின்னர் லோக்சபாவை நாளை காலை வரை ஒத்திவைத்து சபாநாயகர் அறிவித்தார்.
அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
* இந்திய பொருளாதாரம் வலுவாகவே உள்ளது.
* வரும் 2025-26ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும்.
* சில்லரை பணவீக்கம் படிப்படியாக நிர்ணயித்த இலக்கில் சீராக இருக்கும்.
* வரும் நிதியாண்டின் 4வது காலாண்டில் உணவு விலைவாசி குறைய வாய்ப்பு உள்ளது.
* கிராமப்புறங்களில் நுகர்வு தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.
* நாட்டில் தற்போது பாதுகாப்பற்ற கடன்கள் அதிகரித்து வருகிறது.
* சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |