இந்தியா சீனா ஏன் இந்த பதற்றம்

திடீர் என்று உருவாக காரணம் எல்லை பிரச்சனை அல்ல.

காரணம் :01

மேக் இன் இந்தியா என்று அனைத்து நிறவனங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய கூறுகிறார் மோடி.. அதாவது xiaomi நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்ட நிறுவனமாக இருக்கலாம் ஆனால் அவர்கள் உற்பத்தி இந்தியாவில் செய்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறது மோடி அரசு.

 

இறக்குமதி செய்து இந்தியாவை சந்தையாக மாற்றாமல். இங்கேயே உற்பத்தி செய்து இங்கேயே விற்பனை செய்யுங்கள் என்கிறார் மோடி.சீனா தன்னுடய ஏற்றுமதியில் அதிக வருமானம் பார்ப்பது இந்த எலக்ரானிகள் பொருட்கள் , பிளாஸ்டில் விளையாட்டு பொருட்கள் மற்றும் Machinery.  

 

Electrical machinery, equipment: US$557.1 billion (26.3% of total exports)

Machinery including computers: $344.8 billion (16.3%)

 

ஆக மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 42.6% இதனை சார்ந்தது. ஆனால் இப்படி இந்தியா உள் நாட்டு உற்பத்தியை உருவாகும் என்றால் இது நேரடியாக சீனாவின் வளர்ச்சியை பாதிக்கும். இதனால் வெகுவாக சீனாவின் உற்பத்தி பாதிக்கபடுகிறது. அதாவது Made in china என்று இருப்பதை Made in india என்று நிறுவனங்கள் செல்வதை தடுக்கவும் முடியாது. 

 

ஆசியா முழுவதும் Assembled in China என்று இருந்த Apple நிறுவனம் இன்று Made in india என்று இந்தியாவுக்கு வரபோவது என்று இப்படி அனைத்து நிறுவனமும் உற்பத்தியை சீனாவில் செய்வதை விட்டு இந்தியாவில் செய்து இந்தியாவில் வியாபாரம் செய்ய முடிவாவதால் தங்கள் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கபடுகிறது.

 

அதை விட கொடுமை இது இத்துடன் நிற்காது என்று சீனா பயம் கொள்கிறது. ஏன் என்றால் இந்தியாவிடம் இந்திய பெருங்கடல் இருப்பதால் எளிதில் ஆப்ரிக்க நாடுகள், வலைகுடா நாடுகளுக்கு இந்த உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதி ஆகும் என்றால் மிக பெரிய பொருள்தார பின்னடைவு சீனாவுக்கும், அதே நேரம் இந்தியாவின் பலம் கூடும் என்பதால் அது ஆசியாவில் சீனாவின் செல்வாக்கை வீழ்த்து.

இதனால் தான் இந்தியாவை தனது CPEC , One Belt One Belt (OBOR) திட்டங்களில் சேர கூறி அழுத்தம் கொடுத்தனர் சீனா. ஆனால் இந்தியா அதில் உள்ள தந்திரத்தை உணர்ந்து மறுத்துவிட்டது. இது தான் முதல் முக்கிய காரணம்.

 

காரணம் :02

கம்யூனிஸ்ட்களின் இயற்கையான குணம் நாடு பிடிக்கும் ஆசை. அது சீனாவிடம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் இந்தியா மட்டும் அல்ல எல்லா நாடுகளுடன் இந்த நாட்டு பிரச்சனை உண்டு. எல்லையை பகீர்ந்திருப்பது இந்தியா , நேபாள் என்று 18 நாடுகளுடன். ஆனால் பிரச்சனை இருப்பது 20 நாடுகளுக்கு மேல்.

 

முன்னரே திபத் , தைவான் ஆக்கரமிப்பு வேறு. இப்படி எங்கேடா துண்டு நிலம் இருக்காதா ! அதை எப்டி கைபற்றலாம் என்று அலையும் கீழ்தரமான நாடு சீனா. உலகத்தின் மிக அமைதியான நாடுகள் பட்டியலில் எப்போதுமே இருந்து வரும் பூட்டான் மீது இப்போ அதீத ஆசையில் அந்த சின்ன நாட்டை நாக்கை தொங்கவிட்டு சுற்றி சுற்றி வருகிறது சீனா. ஆனால் குட்டி நாடு தான் என்றாலும் அதை கைபற்றிவிடமுடியாத வண்ணம் இந்திய இடைஞ்சலாக பூட்டானுக்கு ராணுவ பாதுகாப்பு வழங்குகிறது.

 

அதாவது 1950 களில் திபெத் என்ற நாட்டை எப்படி கைபற்றியபோது நேரு சீனாவுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவிலையோ அது போல இப்போவும் இந்தியா இருக்க வேண்டும் என்று நினைக்கிறது சீனா. ஆனால் கம்யூனிஸ்ட் துரோகிகள் ஒரு நாளும் நம்பதகுந்தவர்கள் அல்ல என்று உறுதியாக இருக்கிறது சூடுகண்ட பூனையாக இந்தியா. ஏன் என்றால் வரலாறு முழுவதும் துரோகம் மட்டுமே சீனாவும் , அவர்களின் செல்ல பிள்ளைகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் இருந்து வந்தனர் என்ற அனைவரும் நல்ல விழிப்புணர்வுடன் இந்தியாவில் இருப்பதால் இந்த பூட்டானை கைபற்ற முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறது.இது காரணம் இரண்டு.

 

காரணம் : 03

இந்தியாவில் உள்ளே உள்ள சீனாவின் நலம் விருமிகளான 

1.சில கம்யூனிஸ்ட் பத்திரிக்கைகள்

2.கம்யூனிஸ்ட் தீவிரவாத இயக்கங்களான மாவோஸ்ட், நக்ஸல் அமைப்புகள் – இதன் ஆதரவாளர்கள்.

3.இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள். இவர்களுக்கு வந்துள்ள சிக்கல்.

 

இந்தியாவில் சீனா எப்போதுமே தனது ஆதரவாளார்களை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அதற்கு மிக அதிகமாக துணை போவது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் அவர்கள் நடத்தும் செய்தி நிறுவனங்களும் ஆகும். NDTV, The hindu போன்ற நிறுவங்கள் நல்ல எடுத்துகாட்டு. 

இது போதாதென்று மாவோஸ்ட் , நக்ஸல் போன்ற கம்யூனிஸ்ட் தீவிரவாத அமைப்புகள் அதன் ஆதரவாளர்கள் எல்லாம் முழுமையாக கண்காணிப்பு வளையத்தின் உள்ளே வந்துவிட்டனர். இது ஒருபக்கம் இருக்கு இந்தியாவை சிதறடிக்க வேண்டும் என்று மொழி பிரச்சனையை தூண்டிவிட அந்த அந்த மாநிலங்களில் உள்ள அனைத்து அமைப்புகளுக்கும் சீனா – அரபிய நாடுகள் மூலமாக நிதி வழங்கி வந்தது.இன்று அந்த அமைப்புகள் நிதி பெறும் வழியை எல்லாம் மத்திய அரசு இழுத்து மூடிவிட்டது. 

 

இப்படி அனைத்து சீன ஆதரவு ஓநாய்கள் எல்லாம் தனிமைபடுத்தபடுவது சீனாவின் கனவான இந்தியா பல நாடுகளாக சிதற வேண்டும் என்ற ஆசையில் மண்ணை அள்ளி போட்டது போல் ஆகிவிட்டது. இதனால் கடந்த சில மாதங்களாகவே கம்யூனிஸ்ட் தலைவர்கள் சீனாவின் தலைவர்களை சந்தித்த வண்ணம் இருக்கிறார்கள். 

 

இது மூன்றாவது காரணம்.

 

காரணம் : 04

 

தென் சீன கடல் பகுதியில் சீனாவின் அடாவடிதனத்திற்கு எதிராக நிற்கும் பிலிப்பென்ஸ், மலேசியா, வியட்னாம், கம்போடியா போன்ற நாடுகளுடன் அமெரிக்கா, ஜப்பான் ஆதரவு தெரிவிக்க சமீபகாலமாக இந்தியாவும் இணைகிறாது.

 

   அமெரிக்கா , ஜப்பான் , இஸ்ரேல் , இந்தியா உறவு தற்காலத்தில் மிக அதிக நெருக்கம் ஆவதால் சீனாவுக்கு இது மிக பெரிய பதட்டத்தை உருவாக்குகிறது. ஆசியாவில் மிகபெரிய வழுவான நாடு என்று தன்னை உருவாக்க விரும்பும் இந்த சீனாவுக்கு இது பெரும் பின்னடைவை உருவாக்கும். இந்த தென் சீன கடல் பகுதியில் பிரச்சனை நாங்காவது முக்கிய காரணம்.

 

இவை தான் முக்கிய காரணமே தவிர வேறு ஒன்றும் இல்லை. 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு

சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...