சோழியும் குடுமியும் சும்மா ஆடுமா என்ன?

ராஜிவ் கொலையாளிகள் மூன்று பேருக்கும் தூக்கு தண்டனையை ரத்து செய்யகோரும் தமிழக சட் டசபை தீர்மானத்தை போன்று பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி அப்சல் குருவின் தூக்கையும் ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை கொண்டுவர ஜம்மு காஷ்மீர் சுயேச்சை எம்.எல்.ஏ., ஒருவர் நோட்டீஸ் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை தந்திருக்கலாம் அனால் இது எதிர்பார்த்ததே .

சோழியும் குடுமியும் சும்மா ஆடுமா என்ன?

கடந்த 2001, டிசம்பர் 13ம் தேதி, நாடாளுமன்த்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பாதுகாப்பு வீரர்களும், நாடாளுமன்றதின் ஒரு அலுவலரும் தங்கள் உயிரை தியாகம் செய்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் உயிர்களையும் நமது தேசத்தின் மானத்தையும் காப்பாற்றினர் ,

இந்நிலையில் இந்த தாக்குதலில் சதித்திட்டம் தீட்டியதாக அப்சல் குரு கைது செய்யப்பட்டார் , மேலும் அவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்க பட்டது சுப்ரீம் கோர்ட்டும் கடந்த 2004ம் ஆண்டு மரண தண்டனையை உறுதி செய்தது .

இதைதொடர்ந்து , அப்சல்குருவை 2006ம் ஆண்டு அக்டோபர் 20ந் தேதி தூக்கிலிடுவது என்று முடிவு செய்யபட்டது. இந்நிலையில் அவரது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு அவர் மனைவி, ஜனாதிபதிக்கு கருணைமனு அனுப்பினார்.

மத்திய அரசு அப்சல் குருவை தூக்கில்போட விரும்பவில்லையோ என்னவோ அவரது கருணைமனுவை கடந்த 4கு ஆண்டுகளாக கிடப்பில் போட்டுவிட்டது, அவரை தூக்கில் போடவேண்டும் என்ற நெருக்கடி நான்கு பக்கமும் நெருக்கவே, அப்சல்குருவின் கருணை மனுக்களை நிரகரித்து அவரை தூக்கில் இடுவதற்கு பதிலாக, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கபட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நிராகரித்துள்ளார், இதன் மூலம் தமிழ் உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் , தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகும், இதை பயன்படுத்தி அப்சல்குருவை காப்பாற்றி விடலாம் என்ற திட்டம் மறைந்திருப்பதாகவே தெரிகிறது.

தவறு செய்தவர்கள் தண்டிக்க பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை , ஒருவர் செய்த தவறை நியாய படுத்துவது என்பது, பலநூறு குற்றவாலிகளை உருவாக்குவதற்கு சமம் ,

அதே நேரத்தில் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் நாடாளுமன்ற தாக்குதலை ஓப்பிடுவது தவறு , 1991ம் ஆண்டு உயர் திரு நம் பாரத்பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யபட்ட பிறகு தாங்கள் செய்த தவறை உணர்ந்த விடுதலை புலிகள் இந்தியாவின் மீது எந்த வித தாக்குதலையும் நடத்தவில்லை என்பதே உண்மை,

ஆனால் அப்சல் குருவின் நிலையோ வேறு ,லஷ்கர் – இ – தொய்பா மற்றும் முகாஜுதீன் போன்ற தீவிர வாத இயக்கங்களின் முகவர்களான இவரை போன்றவர்கள் இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி கொண்டிருக்கின்றனர் , மேலும் தொடர்ந்து தாக்குதலை நடத்த திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர் ,

இதுவரை முபையில் மட்டும் 1993 ம ஆண்டிலிருந்து இன்று வரை நடைபெற்ற முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள் மட்டும் 9 பது, இதில் மட்டும் சுமார் 700 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர், பலாயிரம் பேர் காயம் அடைந்து நடை பிணமாக வாழ்ந்து வருகின்றனர் ,

குறிப்பாக அப்சல் குருவின் 2001, டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்ற தாக்குதலுக்கு பிறகும் 7 முறை முபையில் மட்டும் தாக்குதல் நடை பெற்றுள்ளது இதில் மட்டும் சுமார் 450 பேர் வரை பலியாகியுள்ளனர், இது எதை குறிக்கின்றது இந்தியாவின் எதிர்ப்பை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகின்றது,

இப்படியாக இந்தியாவின் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி பேரழிவை ஏற்ப்படுத்தி கொண்டிருக்கும் தீவிரவாதிகளின் மீது நாம் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் இது இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் நம் பாரத தேசத்தை தக்க காத்துகொண்டிருக்கும் குள்ள நரிகளுக்கும் எட்டப்பர்களுக்கும் பெரும் உற்சாகத்தையே தரும், பெரும் ஊக்கத்தையே தரும் , மேலும் தாக்குதல் நடத்துவதர்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்,

நாடாளுமன்த்தின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் 10 ஆண்டுகளாக விசாரிக்க படுகிறாகள் என்பது மிகவும் வருத்தப்படவேண்டிய ஒரு விஷயம் , மேலும் 4 ஆண்டுகளாக கருணை மனுக்களை பரிசிலனை செய்கிறார்கள் என்றால் அது ஒரு கேவலமான விஷயம் , இவரை காப்பாற்ற சட்டசபை தீர்மானம் என்றால்? (உங்களிடமே விட்டு விடுகிறேன் )

2001, டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்ற தாக்குதலுக்கு பிறகு தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவின் மீதான தாக்குதலை நிறுத்தி இருக்கும் என்றால் நாம் அப்சல் குருவை மன்னித்து விடலாம், ஆனால் நாம் இன்று வரை முதுகில் குத்தப்பட்டு வருகிறோம்,

இதேநிலை நீடித்தால் அப்சல் குரு மட்டுமல்ல, கசாபையும் அனேகமாக விடுதலை கூட செய்து விடுவார்கள். மனசாட்சியற்ற நம் அரசியல்வாதிகளுக்கு நம்நாடும் நம் நாட்டு மக்களும் நமது சட்ட திட்டமும் முக்கியமில்லை. படுபாதகம் செய்தவர்களுக்கு மட்டுமே மனித உரிமைகள் பயன்படும் கேவலமான நாடாக நம்நாட்டை போலி மதசார்பின்மை பேசும் அரசியல்வாதிகள் மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...