நாட்டில் உள்ள அனைத்துவீடுகளுக்கும் வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் மின் இணைப்பு வழங்கப்படும் என்று மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த ஆண்டு மே மாதத்துக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.மக்களவையில் இதுதொடர்பாக வியாழக் கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இந்தத் தகவல்களை அவர் தெரிவித்தார்.
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் நாட்டின் பலகிராமங்களுக்கு இன்னும் மின்வசதி சென்றடையவில்லை என்று பிரதமர் மோடி பல்வேறு தருணங்களில் ஆதங்கம் தெரிவித்திருக்கிறார். அதனை அனைத்து மக்களுக்கும் சென்றுசேர்க்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\
இந்நிலையில், இதுகுறித்து மக்களவையில் சில கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு பியூஷ்கோயல் அளித்த பதில்:
மின் விநியோக நிறுவனங்களின் நிதிநிலை மோசமடைந்திருப்பதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. கடந்த 2012-13-ஆம் ஆண்டில் ரூ.2,53,700 கோடியாக இருந்த மின் விநியோக நிறுவனங்களின் நஷ்டவிகிதம் மற்றும் கடன் சுமை, 2014-15-இல் ரூ.3,60,736 கோடியாக உயர்ந்துள்ளது.
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இருப்பினும், நிதிச்சுமையில் இருந்து மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மாநிலங்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்வோம். மத்திய அரசால் அறிமுகப் படுத்தப்பட்ட 'உதய்' திட்டத்தின் கீழ் இணைந்த பிறகு மாநில அரசு மின்விநியோக நிறுவனங்களின் கடன் சுமை ரூ.11,000 கோடி வரை குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தை வென்றெடுப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. அதன்படி, எதிர்வரும் 2018-ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்வசதி ஏற்படுத்தித் தர அரசு உறுதிபூண்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அதேபோன்று வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார் பியூஷ் கோயல்.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.