மத்திய அமைச்சரவையில் எங்கள் கட்சி இடம் பெறுவது இயல்பான விஷயம்தான்

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா ஆகியோரை பிகார் முதல்வர் நிதீஷ்குமார் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், சரத்யாதவ் தனது விருப்பப்படி முடிவெடுக்கலாம் என்று தெரிவித்தார். பிகாரில் நிதீஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்ததால் அவரது கட்சியைச்சேர்ந்த மூத்த தலைவரான சரத்யாதவ் அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில், நிதீஷ் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.


பிகாரில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் ஆகியவற்றுடனான மகா கூட்டணியை ஜூலை 26-ம் தேதி முறித்துக் கொண்ட அந்த மாநில முதல்வர் நிதீஷ், அதைத்தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தொடர்ந்து வருகிறார்.


பாஜகவுடன் கூட்டணி அமைத்த பிறகு முதல்முறையாக தில்லிக்கு வெள்ளிக்கிழமை வந்த நிதீஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் நிதீஷ் குமார் கூறியதாவது:மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினேன். இம்மாத இறுதியில் மீண்டும் தில்லிவர இருக்கிறேன். அப்போது, பிகார் மாநில வளர்ச்சிப் பணிகள் குறித்து பேச இருக்கிறேன் என்றார்.


தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை நிதீஷ் சந்தித்தார். அப்போது, நிதீஷுக்கு அமித்ஷா மதிய விருந்துஅளித்தார். இந்த சந்திப்பின்போது, மாநில அளவிலும், தேசியளவிலும் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிகழ்வுகள் குறித்து இருதலைவர்களும் விவாதித்தனர்.


இந்த சந்திப்புக்குப்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிதீஷ் குமாரிடம், மத்திய அமைச்சரவையில் உங்கள் கட்சி இணைய வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, பிகாரில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. எனவே, மத்திய அமைச்சரவையில் எங்கள் கட்சி இடம் பெறுவது இயல்பான விஷயம்தான் என்றார்.


பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் உங்கள்கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் அதிருப்தி அடைந்துள்ளாரே? என்ற கேள்விக்கு, 'எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில் ஒருமித்தகருத்தின் அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவெடுத்தாகி விட்டது. இது நான் தனிப்பட்ட முறையில் எடுத்த முடிவு அல்ல. கட்சியில் ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவுதான். இதில் யாருக்காவது மாற்றுக்கருத்து இருக்கும் என்றால், அவர்கள் தங்கள் விருப்பப்படி முடிவெடுக்கலாம்' என்றார்.


ஐக்கிய ஜனதா தளம்கட்சிக்கு இப்போது மக்களவையில் இரு எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 10 எம்.பி.க்களும் உள்ளனர். கட்சியின் மாநிலங்களவைத் தலைவராக உள்ள சரத் யாதவ், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிருப்தியில் உள்ளார்.


ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியசெயற்குழுக் கூட்டம் பாட்னாவில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இணைவது குறித்து அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...