உத்தரப்பிரதேச சட்டமேலவை இடைத்தேர்தலில் யோகி ஆதித்ய நாத் போட்டி

உத்தரப்பிரதேச சட்டமேலவை இடைத்தேர்தலில் அந்தமாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத், துணை முதல்வர்கள் கேசவ்பிரசாத் மௌர்யா, தினேஷ் சர்மா ஆகியோர் போட்டியிட உள்ளனர்.


பாஜக புதன் கிழமை வெளியிட்ட அறிவிப்பில் இந்தத்தகவல் இடம்பெற்றுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: உத்தரப்பிரதேச சட்ட மேலவை இடைத்தேர்தலில் போட்டியிட யோகி ஆதித்யநாத், கேசவ் பிரசாத் மௌர்யா, தினேஷ் சர்மா ஆகியோரும், உத்தரப்பிரதேச அமைச்சர்கள் ஸ்வதந்திர தேவ் சிங், மோசின் ரஸா ஆகியோரும் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர் என்று அந்தஅறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமாஜவாதி கட்சியைச்சேர்ந்த சில சட்ட மேலவை உறுப்பினர்கள் (எம்எல்சி) அண்மையில் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர். அதைத்தொடர்ந்து, காலியான அந்த இடங்களுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
யோகி ஆதித்யநாத் உள்பட 5 பாஜக வேட்பாளர்களும் மாநில இரு அவைகளிலும் தற்போது உறுப்பினர்களாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட் ...

ஈஷா மஹா சிவராத்திரி நம் பண்பாட்டின் மறுமலர்ச்சி; மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் கோவை ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்றது. ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவு ...

நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ராகுல் உருவெடுத்துள்ளார்  மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான நபராக, காங்கிரஸ் எம்பி ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ ச ...

பிரதமர் மோடியுடன் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ...

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) தொழில்​நுட்​பத்தை மக்​கள் நலனுக்​காக பயன்​படுத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

மருத்துவ செய்திகள்

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...