மாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி உள்ளார்.
சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் உரையாற்றியதன் 125-வது ஆண்டு தினம் மற்றும் பண்டித தீனதயாள் உபாத்யாயாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கான கருத்தரங்கம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இன்றைய சூழ்நிலையில் எந்த அளவுக்குவளர்ச்சி அடைந்துள்ளது என்பதை வைத்துதான் ஒருநாட்டை உலக நாடுகள் மதிப்பீடு செய்கின்றன. மாறாக, அந்த நாடு 5,000 ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது ராமர் அல்லது புத்தர்காலத்திலோ எப்படி இருந்தது என்பதை கருத்தில் கொள்வதில்லை.
எனவே, மாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்காக பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு சுவாமி விவேகானந்தர் ஆதரவாக இருந்தார். அவரது எண்ணப்படியே மத்திய அரசு செயல்பட்டுவருகிறது. மேலும் அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் தூதுவராக விவேகானந்தர் விளங்கினார்.
குறிப்பாக, 125 ஆண்டுகளுக்கு (1893) முன்பு இதே நாளில் (9/11) அமெரிக்காவின் சிகாகோ நகரில் தனது இளம்வயதில் விவேகானந்தர் ஆற்றிய உரை பல்வேறு மதத்தினரின் இதயங்களையும் கவர்ந்தது.
ஆனால் அதே அமெரிக்க மண்ணில் கடந்த 2001-ம் ஆண்டு இதே நாளில் (9/11) உலக வர்த்தக மைய கட்டிடத்தை தீவிரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தனர். இதனால் பேரழிவு ஏற்பட்டது. விவேகானந்தரின் உரையை அனைவரும் மறக்காமல் இருந்திருந்தால் இந்த கோரசம்பவம் நடந்திருக்காது.
பொதுமக்கள் அடிக்கடி வந்தேமாதரம் என கூறுகிறார்கள். ஆனால், பெண்களை மதிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான். அதுபோல, பான்பராக்கை சிலர் வாயில் போட்டு மென்றுவிட்டு தாய் இந்தியா (பூமி) மீது துப்புகின்றனர். எனவே, தூய்மையைப்பற்றி கவலைப்படா தவர்களுக்கும் பெண்களை மதிக்காதவர்களுக்கும் ‘வந்தே மாதரம்’ என்று முழக்கமிட உரிமை இல்லை.
பிறமாநில கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்த கல்லூரி நிர்வாகங்கள் முன்வரவேண்டும். அதாவது ஹரியாணாவில் உள்ள கல்லூரிகளில் தமிழர் பண்டிகைகளையும் பஞ்சாபில் உள்ள கல்லூரிகளில் கேரள பண்டிகைகளையும் கொண்டாட வேண்டும். அதேநேரம் ‘ரோஜா தினத்தைக்’ (காதலர் தினம்) கொண்டாடுவதற்கு நான் எதிரானவன்அல்ல. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.