காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நம்பகதன்மையை இழந்து விட்டது. எனவேதான் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள் மக்களிடம் உருவாகியுள்ளது என்று பாரதிய ஜனதா தலைவர்கள் சுஷ்மாஸ்வராஜ், அருண் ஜேட்லி உள்ளிட்டோர் குற்றம் சாட்டினர்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர்கள் கூறியதாவது: மத்திய அரசுக்கும், காங்கிரஸ்க்கும் இடையேயான கருத்து வேறுபா டுகளே சமீபத்திய நாடாளுமன்ற கூட்ட தொடரில் பிரதானமாக_இருந்தது.
கூட்டதொடர் தொடங்கியதிலிருந்தே மத்திய அரசு தன்னிசையாக நடந்து கொண்டது. அதனால் அரசில் உள்ள சில மூத்த அமைச்சர்களுக்கே கசப்புணர்வு ஏற்பட்டது.மழைக்கால கூட்ட தொடரின் போது நடவடிக்கைகள் திட்ட மிட்டபடி நடை பெறாமல் போனதற்கு மத்திய அரசுதான் காரணமே தவிர எதிர்கட்சிகள் அல்ல.
அண்ணா ஹசாரே போராட்டத்தை கையாளுவதில் மத்திய அரசுகுள்ளேயே கருத்து வேறுபாடு காணபட்டது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ்க்கும், மத்திய அரசுக்கும் இடையேயான கருத்துவேறுபாடும் அம்பலத்துக்கு வந்தது.விளையாட்டு துறை தொடர்பான மசோதா குறித்து மத்திய அமைசரவை கூட்டத்திலேயே கருதொற்றுமை இல்லை. மனிதஆற்றல் மேம்பாட்டு அமைச்சகம் சார்பாக அமைச்சர் கபில்சிபல் தாக்கல் செய்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினர்களே எதிர்ப்பு தெரிவித்தனர் என அவர்கள் தெரிவித்தனர் .
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.