குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்கிரஸ் திருத்தியது – நிர்மலா சீதாராமன்

‘குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது. அடக்கு முறையில் ஈடுபட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை ஏந்தி தற்போது போராடுகின்றனர்’ என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டி உள்ளார்.

அரசியலமைப்பு சட்டம் மீதான விவாதத்தின் போது, ராஜ்யசபாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்திராவுக்கு எதிரான வழக்கு நிலுவையில் இருந்த போது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. குடும்பத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தை காங்., திருத்தியது. காங்கிரஸ் குடும்பம் அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து திருத்திக் கொண்டே இருந்தது. பெண்களுக்கு எதிரான கொள்கை கொண்டது காங்கிரஸ்.

ஜனநாயகம்

பொருளாதார வளர்ச்சியை காங்கிரஸ் கொள்கை சீர்குலைத்தது. கருத்துச் சுதந்திரம் பற்றி இன்றும் பெருமை பேசும் ஜனநாயக நாடான இந்தியா, இந்தியர்களின் பேச்சுச் சுதந்திரத்தை முடக்கும் வகையிலும், அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட ஓராண்டுக்குள் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை முதல் இடைக்கால அரசு கொண்டு வந்தது. ஜனநாயகம் குறித்து பெருமை கொள்கிறோம். அடக்கு முறையில் ஈடுபட்ட கட்சியை சேர்ந்தவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை ஏந்தி தற்போது போராடுகின்றனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...