தேசத்தின் மற்றபகுதிகளுடன் காஷ்மீர் மக்கள் ஒன்றிணைவதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியுள்ள அகதிகள் பிரச்னையை நாம் ஏற்கெனவே சந்தித்து வருகிறோம். தற்போது மியான்மரில் இருந்து ரோஹிங்கயா அகதிகள் இங்கு ஊடுருவியுள்ளனர். அவர்களுக்கு அடைக் கலம் தருவதால் நமது வேலை வாய்ப்புகளில் நெருக்கடியை அளிப்பதோடு தேசியப்பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.
ரோஹிங்கயா அகதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது தொடர்பான எந்த முடிவும் தேசியப் பாதுகாப்பை மனதில் கொண்டே எடுக்கப்பட வேண்டும்.காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் இடம் பெயர்ந்தவர்களின் பிரச்னைகள் இன்னமும் தீர்க்கப்பட வில்லை. காஷ்மீர் தொடர்பாக அரசியல் சாசனத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்படவேண்டும். அந்த மாநிலம் சம்பந்தப்பட்ட பழைய ஷரத்துகள் மாற்றப்பட வேண்டும். அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால் மட்டுமே ஜம்முகாஷ்மீர் மக்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் முழுமையாக ஒன்றிணைய முடியும்.
பசுப் பாதுகாவலர்களால் சிலர் கொல்லப்படுவது கண்டிக் கத்தக்கது. அதே வேளையில் பசுக்களைக் கடத்துபவர்கள் பலரையும் கொன்றுள்ளனர். பசுக்களைக்காப்பது என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டதாகும். பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்களைப் போல், பல்வேறு முஸ்லிம்களும் பசுக்களைக் காப்பதற்காக தங்கள் உயிரைத்தியாகம் செய்துள்ளனர். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, சிறு, நடுத்தரத் தொழிலகங்களும், சுயவேலை வாய்ப்பை அளிக்கும் வர்த்தகங்களும் காக்கப்படவேண்டும். ஏனெனில் அவை பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கின்றன.
விவசாயிகள் பிரச்னை: தங்கள் குடும்பங்களுக்கு மட்டுமின்றி நாட்டுக்கே உணவளிக்கும் நமது விவசாயிகள் தற்போது துன்பத்தில் உள்ளனர். அவர்கள், வெள்ளம் மற்றும் வறட்சி, அரசின் ஏற்றுமதி – இறக்குமதிக்கொள்கை, விளைபொருட்களுக்கு குறைந்தவிலை, அதிகரிக்கும் கடன்கள், பயிர்ச்சேதத்தால் அனைத்தும் இழப்பது ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடன்தள்ளுபடி போன்ற அரசின் நடவடிக்கைகள் தாற்காலிகமானவையே தவிர, விவசாயிகள் பிரச்னைக்குத்தீர்வல்ல.
மும்பையில் வெள்ளிக் கிழமை ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். அவர்களது குடும்பத்தாருக்கும், அச்சம்பவத்தில் காயமடைந் தோருக்கும் அனுதாபங்கள்.
நாக்பூர் நகரில் உள்ள ராஷ்டரிய சுவயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தலைமை அலுவலகத்தில் விஜயதசமி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மத்திய மந்திரி நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆற்றிய சிறப்புரை
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.