அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் 3 நாள்கள் உண்ணாவிரதம்

குஜராத்தில் அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் 3 நாள்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். குஜராத் மக்களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் எழுதிய திறந்த மடலில் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

கடித விவரம்: குஜராத் கலவர வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பை சிலர் வெற்றி என்றும் வேறு சிலர் தோல்வி என்று கூறுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கிறது. 2002-ம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த வன்முறைகளில் எனக்குத் தொடர்பு இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி ஏற்படுத்தப்பட்ட மோசமான சூழலுக்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் முடிவு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மீதும் என்மீதும் அவதூறுப் பிரசாரம் செய்வதே நாகரிகம் என்பது போல ஆகியிருந்தது. குஜராத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களே இதுபோன்ற அவதூறுகளைத் தொடர்ந்து பரப்பி வந்தனர். இப்போது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. இதன் பிறகாவது என் மீதான அவதூறு பிரசாரம் நிறுத்திக் கொள்ளப்படுமா என்று உறுதியாகக் கூறிவிட முடியாது. ஆனால் இத்தனை ஆண்டுகளாகப் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டோர் மீதான நம்பகத்தன்மை இனி குறைந்து போகும் என்பதை மட்டும் உறுதியாகக் கூற முடியும்.

பொய்ப் பிரசாரம் செய்வோரை மக்கள் இனி நம்ப மாட்டார்கள். எத்தனையோ பொய்ப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் கடந்த பத்து ஆண்டுகளில் அமைதி, நல்லிணக்கம் பொருளாதாரத்தில் குஜராத் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இதே பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்பதிலும் குஜராத் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். வெறுப்பை வெறுப்பால் வெற்றி கொள்ள முடியாது என்கிற சொல்வழக்கு உண்டு.

நமது நாட்டின் உண்மையான பலம் ஒற்றுமையிலும் நல்லிணக்கத்திலும்தான் இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது சிறப்பு. இதைப் பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக “சத்பாவன மிஷன்’ என்கிற இயக்கத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

அதன் ஒரு பகுதியாக வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) முதல் 19-ம் தேதி வரை 3 நாள்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறேன். இந்த உண்ணாவிரதத்தின் மூலம் குஜராத்தில் அமைதி, ஒருமைப்பாடும், நல்லிணக்கம் ஆகியவை வலுப்பெறும் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று மோடி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...