சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு செய்யப்பட்ட உறுப்பமாற்று சிகிச்சையில் விதி மீறல்கள் நடந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. நடராஜனுக்கு யார் உறுப்புதானம் செய்தார்கள் என்று மருத்துவமனை தெளிவாக குறிப்பிடவில்லை.
தஞ்சாவூரைச் சேர்ந்த மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உறுப்புகள் 74 வயது நபருக்கு பொருத்தப் பட்டதாக மருத்துவமனை கூறி இருந்தது. இதனால் இளைஞர் கார்த்திக்கின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நடராஜனுக்கு பொருத்தப் பட்டிருக்கலாம் என்று அதிகாரப் பூர்வமில்லாத செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் நடராஜனுக்கு செய்த உறுப்புமாற்று சிகிச்சையில் விதிமீறல்கள் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியவர் கூறியதாவது : நடராஜனுக்கு செய்த உறுப்புமாற்று சிகிச்சையில் விதிகள் பல மீறப்பட்டுள்ளது, இதில் பல சந்தேகங்கள் எழுகின்றன. சந்தேகங்கள் தீர்க்கப்பட வேண்டும்.
தஞ்சாவூரைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞர் எப்படி குளோபல் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டார். அவருக்கு நிதியுதவி செய்தது யார்.
ஒருநோயாளி மூளைச்சாவு அடைந்தால் அவரின் பெரும்பாலான உறுப்புகள் அவர் சிகிச்சைபெற்ற அந்த மருத்துவமனையில் உள்ள மற்றவர்கள் பெறவே அனுமதி உள்ளது. ஆனால் இரண்டாம்கட்ட ஆலோசனை பெற வந்த குளோபல் மருத்துவமனை எப்படி உறுப்புகளை பெற்றது.
விதிகள் அப்படிஇருக்க கார்த்திக்கின் பெரும்பாலான உறுப்புகள் எப்படி குளோபல் மருத்துவமனை நோயாளிகளுக்கு கிடைத்தது என்பன உள்ளிட்ட பலசந்தேகங்கள் இதில் எழுகின்றன. எனவே இந்த உறுப்புமாற்று சிகிச்சை குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்று தமிழிசை கூறியுள்ளார்
சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.