தமிழகத்தின் பிரச்னைகளில் தி.மு.க., இரட்டைவேடம் போடுகிறது,'' என பொள்ளாச்சியில் நடந்த பா.ஜ., செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
பொள்ளாச்சியில் பா.ஜ., தெற்குமாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டதில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: தற்போது தமிழகத்தின் பிரச்னைகளாக பேசப்படும் கெயில், ைஹட்ரோ கார்பன் திட்டங்கள் அனைத்தும் திமுக., – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது துவங்கப்பட்டவை. அப்போது மவுனம்காத்த திமுக., இப்போது பழியை பா.ஜ., மீது போட்டு, போராட்டம் நடத்தி இரட்டைவேடம் போடுகிறது. திமுக., – அதிமுக., என இரண்டுகழகங்களும் தமிழகத்தில் ஆட்சியமைக்க கூடாது. தமிழகத்தில் நல்லாட்சிஅமைய, அடுத்த தேர்தலில் பா.ஜ., வெற்றிபெற வேண்டும். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அந்த இலக்கைநோக்கி உழைக்க வேண்டும்.
அதிமுக (அம்மா அணி) பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது போடப்பட்டுள்ள தேச துரோக வழக்கு மாநில அரசால் போடப்பட்டுள்ளது. எந்த காரணத்தாலும், பிறகட்சிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை பா.ஜ.க. செய்ததுகிடையாது. இந்த விவகாரத்தில் எங்களுக்கு தொடர்புகிடையாது. சுற்றுலா பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கப்பட்டதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை
இதுகுறித்து முழுமையாக தகவல் கிடைத்ததும் கருத்து தெரிவிக்கிறேன். தாஜ்மகாலுக்கு உள்ள மரியாதை என்றுமே நிலைத்திருக்கும். சினிமாவுக்கு சரக்கு, சேவைவரி விதிக்கப்பட்டு உள்ளது. தமிழ் சினிமா பாதிக்கப்படாத வகையில், மாநில அரசு வரிவிதிக்க வேண்டும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது இவ்வாறு அமைச்சர் பேசினார்.
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.