மத்திய அரசு கொள்முதல் செய்யும் பொருள்களின் தரம்குறித்து ஆய்வுசெய்யும் அதிகாரிகளுக்கான விருந்தோம்பல் உள்ளிட்ட இதரசெலவுகளை விற்பனையாளர்கள் ஏற்பது நிறுத்தப்படவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை மத்திய அரசுத்துறைகளின் செயலர்களுக்கு நிதியமைச்சகம் அண்மையில் அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஏராளமான பொருள்கள் கொள்முதல்செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பொருள்களின் தரம், அதற்கான மூலப்பொருள்கள் பெறப்படும் முறை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு துறையிலும் அதிகாரிகள் நியமிக்கப் பட்டிருக்கின்றனர்.
இவ்வாறு நியமிக்கப் பட்டிருக்கும் அதிகாரிகள், கொள்முதல் செய்யப்படும் பொருள்கள்குறித்து ஆய்வு மேற்கொள்ளும்போது, அவர்களுக்கான உணவுபயணம், தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளை விற்பனை யாளர்கள் ஏற்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்தச்செலவுகளை விற்பனையாளர்கள்தான் ஏற்கவேண்டும் என்ற ஒப்பந்தத்தையும் சில அரசுத் துறைகள் செய்து வருகின்றன.
இதுபோன்ற செயல்களால், இந்த ஆய்வுப்பணிகளின் சுதந்திரம் தடுக்கப்படும். அதுமட்டுமன்றி, தரமான பொருள்களை விற்பனைசெய்யாத நிறுவனங்களை அடையாளம் காண்பதிலும் சிக்கல் ஏற்படவாய்ப்புள்ளது.
எனவே, ஆய்வு அதிகாரிகளுக்கான விருந்தோம்பல் உள்ளிட்ட செலவுகளை விற்பனை யாளர்கள் ஏற்கும்முறை உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இது தொடர்பாக விற்பனை யாளர்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தால் அவற்றை ரத்துசெய்ய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.