புதுமைகளை புகுத்துவதில் நாம் முன்னோடி

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து சர்வதேசதொழில் முனைவோர் மாநாட்டை நடத்துகிறது.  மாநாடு மூன்று நாட்களுக்கு நடக்க உள்ளது.

இம்மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்பை வரவேற் கிறேன். பெண்தொழில் முனைவோரின் பங்களிப்பு தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. நான்கில் மூன்று துறைகளில் பெண்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகிறார்கள். விளையாட்டுத் துறையிலும் இந்தியபெண்கள் பிரகாசித்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்பு களிலும் பெண்கள் முக்கிய பதவிகளை வகித்துவருகின்றனர். விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.

இந்த மாநாட்டில் பங்கேற்று இருப்பவர்களில் 50% பேர் பெண்கள். வரலாற்று காலங்களில் பெண்கள் ஆயுர் வேத வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினர். யோகா மற்றும் ஆன்மிக துறைகளிலும் பெண்களின்பங்களிப்பு முக்கியத்துடம் வாய்ந்ததாக உள்ளது. நான்கில் மூன்று துறைகளில் பெண்களின்பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

விளையாட்டு துறையிலும் இந்திய பெண்கள் பிரகாசித்து வருகின்றனர்.தொழில் முனைவோருக்கு 10 லட்சம்வரை எளிதாக கடன்கிடைக்கும் வகையில் திட்டம் உள்ளது.ஸ்டார்ட் ஆப் இந்தியா என்ற திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.

தெற்கு ஆசியாவிலேயே தொழில் முனைவோரின் மாநாடு முதன் முறையாக இந்தியாவில் நடைபெறுகிறது. பெண் தொழில் முனைவோர் 7 கோடி பேருக்குகடன் வழங்கப்பட்டுள்ளது. 685 பில்லியன் ரூபாய் அளவுக்கு தினமும் வங்கி பரிமாற்றம் நடைபெறுகிறது.

300 பில்லியன் வங்கிகணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டைகளை பயன் படுத்தி 4 கோடி டிஜிட்டல் பரிமாற்றங்கள் நடைபெறுகிறது. புதுமைகளை புகுத்துவதில் நாம் முன்னோடி என்பது கடந்தகாலங்களில் நிரூபணம் ஆகி உள்ளது. நம் ஆதார் திட்டம் உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் தாவுதளம். தொழில் முனைவோருக்கான சட்டம் எளிதாக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...