காங்கிரஸ் அரசாங்கத்தில் நடந்த 2G scam, Coal Mines Scam, CWG Scam, Augusta Helicopter Scam போன்றவற்றில் செய்ய்ப்பட்ட brazen விதிமீறல்களைப் படித்தால் நமக்கு ரத்தக் கொதிப்பு வரும், வர வேண்டும்..!
ஆனால், நாம் இன்று மோடி அரசாங்கம் எடுக்கும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளைக் கண்டுதான் பயங்கரமாக கொதிப்படைகிறோம்! இது ஏன் நண்பர்களே..?
இப்போது என்ன நடந்து கொண்டிருகிறது; மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று என் அறிவுக்கு எட்டியது: நம் நாட்டில் அரசாங்கம் ஏகமாய் வருமானம் ஈட்டியது….ஈட்டுகிறது.. ..
ஆனால், அதை செலவழிப்பதில் தான் நெடுங்காலமாய் பெருந்தவறு நடைபெற்று வருகிறது..! மானியங்கள், இலவசங்கள் என்று ஏழைகளின் பெயராலேயே பணம் எக்கச்சக்கமாய் உண்மையான ஏழைகளுக்குச் சென்றடையாமல் வீணடிக்கப்படுகிறது….அயோக்கியர்களால் சுரண்டப்படுகிறது..! எந்த கன்ட்ரோலும் இல்லாத anarchyயாக இருப்பதால், செலவு எவ்வளவு ஆகிறது; பணம் எங்கே, யாருக்கு போகிறது என்ற கன்ட்ரோலே இல்லை..!
இவ்வளவு செல்வம் ஈட்டும் நம் நாடு, ஏன் மிலிட்டரிக்கு செலவு செய்ய பணமில்லாமல், பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் அஞ்சி நடுங்க வேண்டும் என்று நாம் யோசிப்பதில்லை..!
மானியம்/இலவசம் என்றால் என்ன.? நம்மிடம் வரியை வாங்கி நமக்கே அதில் கொஞ்சம் கொடுப்பது..! இதற்கு தூண்டில் 'ஏழைகள்'..! 'இவ்வளவு பணம் செலவழித்தும், ஏழைகள் ஏன் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள்..?' என்று நாம் கேள்வி கேட்கிறோமா..?
அந்த 'மானியங்கள்/இலவசங்கள்' தேவைப்படும் நபர்களுக்குத்தான் போகிறதா என்று கேட்கிறோமா..?
'மானியத்தில்' கொடுக்கப்படும் Gasஸை இல்லீகலாய் வாங்கி, ஹோட்டல்காரன் செய்து கொடுக்கும் தோசையை 150 ரூபாய் கொடுத்து யோசிக்காமல் சந்தோசமாய் வாங்கிச் சாப்பிடும் நாம், 150 ரூபாய் கேஸ் மானியம் நிறுத்தப்பட்டால் ஏன் கத்துகிறோம்..?
நாம் உபயோகமே படுத்தாத ரேஷன் பொருட்களுக்காய், மானியங்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கான கோடிகளில 'நம்' பணம் வீணாவதைப் பற்றி நாம் ஏன் கவலையே படுவதில்லை..?ஏன்.???
நெடுங்காலமாய், 'ஏழைகள், வெல்ஃபேர் சொசைட்டி' என்ற பெயரில் நம் நாட்டின் செல்வத்தை முறைகேடு செய்து வீணடிப்பதும், மோசடியாய் கொள்ளையடிப்பதற்கும் இருந்த வழிகள் எல்லாம் இப்போது மோடியால் மூடப்படுகின்றன..! கன்ட்ரோல்கள் உருவாக்கப்படுகின்றன..! இதற்கு அஞ்சியே, அரசியலை ஒரு பணம் ஈட்டும் தொழிலாக மாற்றி வைத்திருக்கும் அரசியல்வாதிகள் அரண்டு போய் அலறுகிறார்கள்..!
நமக்கே தெரியாமல், நம் பணம் , நாட்டிற்கு எந்த வகையிலும் உபயோகப்படாமல் செலவழிக்கப் படும்போதும், ஊழலால் சுரண்டப்படும்போதும், வாய் மூடி இருந்த நாம், "இதோ இதைத்தான் நாங்கள் செய்யப் போகிறோம்; இதுதான் கண்ட்ரோல்.." என்று சொல்லிவிட்டு இன்றைய மோடி அரசாங்கம் எடுக்கும் open நடவடிக்கைகளை/பாலிஸிக்களை கண்டிக்கிறோமே, ஏன்..?
மோடி அரசாங்கத்தை நாம் ஏன் அவ்வளவு வெறுக்க வேண்டும்..?
பழைய ஆட்சியாளர்கள் போலவே, நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி் கவலையெல்லாம் படாமல், இலவசங்களும், மான்யங்களும் கொடுத்து, ஊழலோடு, சௌகர்யமாய் ஆட்சி நடத்திவிட்டு, , வெளிநாடுகளில் தீவுகளையும், அங்கே உள்ள வங்கிகளில் பணத்தையும் போட்டு விட்டு தலைமுறை தலைமுறைக்கும் சொத்துகளை சேர்த்துவிட்டு போகலாமே மோடி….அதை விட்டு நேர்மையான நடவடிக்கை எடுப்பது நாட்டின் எதிர்காலத்திற்கும், பாதுகாப்புக்கும் அவசியம் என்று மோடி அரசாங்கம் ஏன் முனைகிறது….இதை ஏன் நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்..? 'மக்களின் அதிருப்தியை ஈட்டுகிறோம் என்று தெரிந்தும், மோடி அரசாங்கம் ஏன் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..?'
இன்றும் அவர் சொந்தக்காரர்கள் எளிமையாக வாழ்கிறார்கள்…. நேர்மையான அரசியல்வாதி தேவை என்கிறோம், ஆனால் அப்படி ஒருவர் ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளின் பொய் பிரச்சாரத்தை கண்டு புழதி வாரி தூற்றுகிறோம்….
உதாரணமாக, காமராஜர் ஆட்சியில் திமுகவின் பொய் பிரச்சாரத்தை நம்பி அவரை தோற்கடித்து விட்டு இன்று காமராஜர் ஆட்சிவேண்டும் என்கிறோம்…. இதையெல்லாம் ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம், நாம் ஏன் சிந்திக்கக் கூடாது..?
படிக்காத சாதாரண மக்கள் புரிந்து கொள்ளத் தவறலாம்; படித்த நமக்கு சிறி்து யோசித்தால் புரியாதா..?
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
Leave a Reply
You must be logged in to post a comment.