ராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலைப் பாட்டை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, சன்னி வஃக்புவாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் மூத்ததலைவருமான கபில் சிபில் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறும்வரை இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று வலியுறுத்தினார். மேலும், 2019 தேர்தலுக்கு முன்பு சட்டப்படி ராமர்கோயில் கட்டப்படும் என்று பாஜக கூறியுள்ளதாக கபில் சிபில் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அமித்ஷா, “வருங்கால காங்கிரஸ் கட்சி தலைவருக்கு நான் ஒருகோரிக்கை விடுக்கிறேன். அயோத்தி விவகாரத்தில் ராகுல் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத் தட்டும்” என்று கூறினார்.
மேலும், “ஒரு பக்கம் ராகுல்காந்தி கோயில்களுக்கு சென்று கொண்டிருக்கிறார். மற்றொரு புறம் அவர்கள் ராமர் ஜென்ம பூமி வழக்கை தாமதமாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்து கின்றனர். காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது” என்றார்.
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.