குஜராத்தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரசுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிக்கிறது. இதற்காக, ரகசிய ஆலோசனை நடந்துள்ளது என பிரதமர்மோடி குறிப்பிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உள்நாட்டில் நடக்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, தேவையி ல்லாமல் பாகிஸ்தானின் பெயரை இழுக்கவேண்டாம். பாகிஸ்தான் குறித்து பொய்யான, ஜோடிக்கப்பட்ட கற்பனை குற்றச் சாட்டுகளை கூறி, பிரசாரம் செய்ய வேண்டாம். தங்கள் சொந்தபலத்தில் வெற்றி பெறுவதற்கு, கட்சிகள் முயற்சிக்க வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
இதற்கு, மத்தியசட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு தேர்தலை எப்படி நடத்தவேண்டும்; அதை எப்படி சந்திக்கவேண்டும் என, யாரும் சொல்லித்தர தேவையில்லை. இந்தியாவின் ஜனநாயகத்தில், மற்றவர்கள் தலையிடுவதை நாங்கள் விரும்ப வில்லை. காங்கிரசுக்கு உதவும் வகையில், தேர்தலை எப்படிசந்திக்க வேண்டும் என, வீண் பிரசங்கத்தில் ஈடுபடவேண்டாம். பயங்கரவாதத்தை எந்தளவுக்கு, பாகிஸ்தான் ஆதரிக்கிறது; ஊக்கு விக்கிறது என்பது, உலகுக்கு தெரியும். நாங்கள், எங்கள் ஜனநாயகத்தை பெருமையுடன் பார்க்கிறோம். ஆதாரமில்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட, மிகவும் பிரபலமான தலைவரான, பிரதமர் மோடி குற்றச் சாட்டை கூறவில்லை. மிகவும் அவசர அவசரமாக, இந்தபிரச்னையில், பாகிஸ்தான் அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இவ்வாறு அவர் கூறினார்.
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.