குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் 2ம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்க ளித்தார் பிரதமர் நரேந்திரமோடி.
182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 9ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, 2வது மற்றும் இறுதிக் கட்டமாக, 14 மாவட்டங்களுக்கு உட்பட்ட 93 சட்டமன்ற தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி சபர்மதியில் உள்ள வாக்குச் சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.
இதற்காக சுமார் 25,550 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில், மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 கோடியே 20 லட்சம் வேட்பாளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வாக்குகள் வரும் 18ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
குஜராத் தேர்தலில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது வாக்கினை பதிவு செய்தார். காந்திநகரில் உள்ள ஆர்யபட் உயர் நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்த ஹீரா பென், பின்னர் செய்தியாளர்களிடம் தனது விரலில் வைக்கப்பட்ட மையை காண்பித்தார். மேலும், குஜராத்தை கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என்றும் கூறினார்.
குஜராத் வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லும் வகையில் வாக்காளர்கள் வாக்களிக்கவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். அகமதாபாத் நகரில் உள்ள நரண்புராபகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் அமித்ஷா வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி சோனல்ஷா, மகன் ஜெய்ஷா ஆகியோரும் வாக்களித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, குஜராத் வளர்ச்சி வேகம் பாதிக்கப்படாமல் இருக்கவும், குஜராத்வளர்ச்சி மாதிரியை குறை கூறுபவர்களுக்கு உரிய பதிலடியை கொடுக்கவும் அதிக அளவில் வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
Leave a Reply
You must be logged in to post a comment.