குஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு வரத்து பல்கலைக் கழகம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்தஅறிவிப்பு இந்திய ரயில்வேதுறையை பெரும்மகிழ்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
குஜராத்தில் தேர்தல் நடந்துகொண்டு இருந்ததால் அம்மாநிலத்திற்கு நலத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப் படாமல் இருந்தது. தற்போது தேர்தல் முடிந்துள்ளதால் குஜராத் மாநிலத்திற்கு மத்திய அரசு நலத் திட்ட அறிவிப்புகள் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி குஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகம் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் அமைய இருக்கும் முதல் தேசியரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக் கழகம் இதுதான். இது ரயில்வே துறையில் இந்தியாவை முன்னேற்றுவதற்கும், இன்னும் நிறைய பணியாளர்களை இதில் சேர்க்கவும் வகைசெய்யும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேசும்போது :''வதோதராவில் தொடங்கப்படும் இந்த பல்கலைக்கழகம் மோடியின் கனவை நினைவாக்கும். மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்களுக்கு வலுசேர்க்கும் என்று கூறியுள்ளார். மேலும் பிரதமரின் நேரடிவிருப்பத்தின் பேரில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். இதற்காக வதோதராவில் ஏற்கனவே இருக்கும் ரயில்வேதுறைக்கு சொந்தமான நிலம் பயன் படுத்தப்பட இருக்கிறது. இந்த பல்கலைக் கழகம் முழுக்கமுழுக்க நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்பட இருக்கிறது. மேலும் இதற்கானதொகை அனைத்தும் இந்திய ரயில்வே துறையிடம் இருந்து பெறப்படும். இதில் 3000 மாணவர்கள் வரை சேர்க்கப் படுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. ரயில்வேதொடர்பான சாட்டிலைட் தொழில்நுட்ப படிப்புகளும் இதில் சொல்லித்தரப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.