பாஜக விதியை பின்பற்றுவதை விட சமூக நீதிக்காக உயிரை விடுவேன் என லாலு பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித் துள்ளார். மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்துக்கு ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் மூன்றரை ஆண்டுகள் சிறைதண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
22 ஆண்டுகளாக நடந்துவந்த இந்தவழக்கில் சிபிஐ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி லாலு குற்றவாளி என தீர்ப்புவழங்கியது. இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த மூன்றுநாட்களாக பல்வேறு காரணங்களுக்காக தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டது.
இந்நிலையில் இன்று தண்டனை விவரத்தை நீதிமன்றம் அறிவித்தது. தண்டனை அறிவிப்புக்குப்பிறகு லாலு பிரசாத் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் எங்களை பின்பற்றுங்கள் இல்லை உங்களை முடித்துவிடுவோம் என்ற பாஜகவின் விதியை பின்பற்றுவதை விட சமூகநீதி, அமைதி மற்றும் சம நிலையை நிலை நாட்டுவதற்காக உயிரை விடுவேன் என தெரிவித்துள்ளார்.
ஊழல் வாதிகளை ஒழித்துக் கட்டுவதுதான் பாஜக,.வின் சமூக நீதி என்பதை புரிந்து கொண்டால் சரி
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.