ராகுல் காந்திக்கு எதிரான உரிமை மீறல்; சபாநாயகரின் பரிசீலனைக்கு அனுப்பினார் வெங்கய்ய நாயுடு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான உரிமைமீறல் தீர்மானத்தை, மக்களவை சபாநாயகர் சுமித்திர மகாஜனின் பரிசீலனைக்கு, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு அனுப்பி வைத்துள்ளார்.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மீதான குற்றச்சாட்டை பிரதமர் நரேந்திரமோடி திரும்பப்பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அலுவல் முடங்கியது. இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர் களைச் சமாதானப் படுத்தும் வகையில், மத்திய அமைச்சர் அருண்ஜேட்லி விளக்கம் அளித்தார். இதற்கு ராகுல் காந்தி, “பிரதமர் மோடி நினைப்பது ஒன்று, பேசுவதுவேறு என தெளிவுபடுத்திய ஜேட்லிக்கு நன்றி” என கிண்டல்செய்தார்.

இதையடுத்து மாநிலங்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக உரிமைமீறல் தீர்மானம் கொண்டுவர அவை விதி 187-ன் கீழ் பாஜக உறுப்பினர் புபிந்தர்யாதவ் நோட்டீஸ் அளித்தார்.“மாநிலங்களவை பாஜக தலைவர் அருண்ஜேட்லியை ராகுல் வேண்டுமென்றே அவமரியாதை செய்துள்ளார்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

குளிர்கால கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று (வெள்ளிக் கிழமை) இந்த நோட்டீஸ் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், இதுமக்களவை விதிகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என, மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்யநாயுடு தெரிவித்தார்.

இந்நிலையில் உரிமைமீறல் புகாருக்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக கருதுவதால் அதை மக்களவை சபாநாயகர் சுமித்திர மகாஜனின் பரிசீலனைக்கு, வெங்கய்ய நாயுடு அனுப்பி யுள்ளார். இது குறித்து மாநிலங்களவை தலைவர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில் ‘‘நிதியமைச்சர் அருண்ஜேட்லி மீதான விமர்சனத்தில் உரிமை மீறல் இருப்பதாக கருத இடமுள்ளது’’ எனக் கூறியுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் நவ.30 ஆம் தேதிவரை ...

மிரட்டும் எலி காய்ச்சல்

மிரட்டும் எலி காய்ச்சல் கேரளாவில் லெப்டோஸ்பிரோசிஸ் (எலி காய்ச்சல்) தீவிரமாக பரவிவருகிறது. இந்த ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா ந ...

மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும் 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியா நக்சலிசத்திலிருந்து ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங் ...

அன்று அயோத்தி இன்று திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை அன்று கடந்த பலஆண்டுகளாக ஏற்றப்பட்டு ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...