ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் ரூ.43 ஆயிரம்கோடி முதலீட்டிலான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இப்பகுதியில் அமைவதன் மூலம் ராஜஸ்தான் மாநில பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக மாற்றம்பெறும் என்று மோடி கூறினார். இந்த ஆலை இங்கு உருவாவதன் மூலம் எதிர்காலத்தில் நாட்டின் மிகப்பெரிய எரிசக்தி மாநிலமாக ராஜஸ்தான் திகழும் என்றும் அவர் கூறினார்.
இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) மற்றும் ராஜஸ்தான் மாநில அரசு இணைந்து மேற்கொள்கின்றன. இந்த ஆலை ஆண்டுக்கு 90 லட்சம்டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்கும் திறன்கொண்டதாக விளங்கும்.
இந்த ஆலை 2022-ம் ஆண்டில் தனது உற்பத்தியை தொடங்கும். இதன்மூலம் மாநில அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.34 ஆயிரம்கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த ஆலை இங்கு உருவாவதற்கு முயற்சிகள் எடுத்த பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரபிரதான், மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோரை பிரதமர் பாராட்டினார். இருவரது முயற்சியால்தான் இந்த ஆலை செயல் வடிவம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
வெறுமனே அடிக்கல் நாட்டிவிட்டு மக்களுக்கு தவறான தகவலை தரக்கூடாது. நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை 2022-ம் ஆண்டில் கொண்டாட உள்ளது. அப்போது இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதேபகுதியில் ஆலை அமைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அடிக்கல் நாட்டினார். ஆனால் அது செயல்வடிவம் பெறவில்லை. அதை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசிய மோடி, இதுபோன்ற சூழல் உருவாகிவிடக்கூடாது என்றும் குறிப்பிட்டார்.
வெறுமனே அடிக்கல் நாட்டுவதில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அது செயல்வடிவம் பெற்று முழு உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்பதே தங்களது விருப்பம். காங்கிரஸ் அரசை பொறுத்த மட்டில் எந்த ஒரு திட்டத்தையும் செயல் படுத்துவதற்கு முன்பு உரிய திட்டமிடல் கிடையாது. ஆனால் எங்கள் அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னேற்பாடாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என முதல்வர் வசுந்தரா ராஜே கூறினார்.
மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு இந்தசுத்திகரிப்பு ஆலை மிகவும் உதவியாக இருக்கும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.