தமிழக அரசு இன்று முதல் பேருந்து கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. மாநகர பேருந்து, புறநகர பேருந்து என அனைத்திலும் ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் மிக அதிகமாக 50 சதவீதம் வரை உயர்த்தி இருப்பது மக்களுக்கு மிகுந்த சுமையை ஏற்படுத்தும்.
பல ஆண்டுகளாக கட்டணம் ஏற்றவில்லை என்று சொன்னாலும் மறைமுக கட்டண உயர்வு நடந்து கொண்டு தான் இருந்தது. ஆகவே ஒரே சமயத்தில் கட்டணத்தை இந்த அளவு உயர்த்துவது மக்களுக்கு மிகுந்த பாரத்தை ஏற்படுத்தும். போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் இயல்பு நிலைக்கு வந்திருக்கும் இச்சமயத்தில் திடீரென்று கட்டணத்தை உயர்த்தி மக்களின் மேல் சுமையை ஏற்றுவது சரியல்ல.
போக்குவரத்து துறையில் ஊழல், சீர்க்கெட்ட நிர்வாகம் இவைகளே இத்துறையின் நஷ்டத்திற்கான காரணங்கள். சரியான பராமரிப்பின்மையால் பேருந்துகள் சரி வர இயக்கப்படாததும் நஷ்டத்திற்கான காரணம். ஆக அடிப்படை கட்டமைப்பு, செலவினங்கள், நிர்வாக சீர்கேடுகள் இவற்றை சரி செய்யாமல் பேரூந்து கட்டணத்தை மட்டுமே உயர்த்துவது தவறான நடவடிக்கை ஆகும்.
போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்க வேண்டும் என்பது விருப்பமல்ல. நஷ்டத்தை சரி செய்ய மாற்றுத் தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். இதை விடுத்து பொதுமக்கள் மேல் சுமையை ஏற்றுவது சரியான தீர்வல்ல. அரசு பேருந்துகளை போல தனியார் பேருந்துகளும் கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று சொல்வது மிகவும் கொடுமையான விஷயம். ஏற்கனவே தனியார் பேருந்துகள் தங்கள் கட்டணத்தை உயர்த்திக் கொண்டுள்ளனர். தற்போது அரசும் உயர்த்திக் கொள்ளலாம் என்று சொன்னால் மக்களுக்கு பண சுமையோடு, பயண சுமையையும் ஏற்படுத்தும். இது தாங்கொணா சுமையாகும். நிதி பிரச்சனையே கட்டண உயர்வுக்கு மூலக்காரணமாகும். நிதி பற்றாக்குறையை மக்களை பாதிக்காத வகையில் சரி செய்ய வழிகளை அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
கட்டண உயர்வு நிதி பற்றாக்குறையை குறைக்கும் என்றால் நிதி சுமையில் தள்ளாடும் இந்த அரசு ஏன் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி உள்ளது. அது நிதி பற்றாக்குறையை ஏற்படுத்தாதா? வாடுவது மக்கள், வாழ்வது மக்கள் பிரதிநிதிகளா? துன்பம் மக்களுக்கு, இன்பம் MLA களுக்கா? ஆகவே பேரூந்து கட்டண உயர்வு திரும்ப பெறப்பட வேண்டும். நஷ்டங்களை சரி செய்ய மாற்று வழிகளை கலந்தாலோசிக்க வேண்டும். கட்டண உயர்வு என்பது முன்னேற்றத்திற்கு என்றால் கட்டண உயர்வு படிப்படியாக செய்யப்பட வேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் மக்களின் தலையில் சுமத்துவது அல்ல. ஒரே நேரத்தில் உயர்த்தினால் அது வளர்ச்சி அல்ல தளர்ச்சி.
மக்களுக்கு பணச்சுமை, பயணச்சுமையை ஏற்படுத்தும் இந்த அதிகமான கட்டண உயர்வு உடனே குறைக்கப்பட வேண்டும். இதற்கு இந்த அரசு மக்கள் நல நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இன்றி, மக்கள் விரோத நடவடிக்கை தொடருமானால் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் மக்கள்;; பணியில்
(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
Leave a Reply
You must be logged in to post a comment.