2ஜி உரிமங்கள் விநியோகம் உள்பட பல்வேறு விவகாரங்களில் தொலைத்தொடர்பு துறை தொடர்பான ஆலோசனைகளையும் கவலைகளையும் தெரிவித்து பிரதமர் அலுவலகத்துக்கு 84 கடிதங்களை எம்பிக்கள் எழுதி உள்ளனர்.
2006-ல் 2 கடிதங்களும், 2007-ல் 18 கடிதங்களும், 2008-ல் 21 கடிதங்களும், 2009-ல் 9 கடிதங்களும் 2010-ல் 21 கடிதங்களும்
இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து ஏப்ரல் வரை 13 கடிதங்களும் பிரதமர் அலுவலகத்துக்கு எழுதப்பட்டுள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்தத் தகவல் தற்போது தெரியவந்துள்ளது. விவேக் கார்ட் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்விகேட்டு இந்த தகவலைப் பெற்றுள்ளார்.
முன்னாள் காங்கிரஸ் எம்பி சுரேந்திர பிரகாஷ் கோயல், சுயேச்சை எம்பி ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் முரளி மனோகர் ஜோஷி, சமாஜவாதிக் கட்சி முன்னாள் தலைவர் அமர் சிங், மார்க்சிஸ்டின் சீதாராம் யெச்சூரி, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் அஷ்வனி குமார் உள்ளிட்ட பலர் கட்சி எல்லைகளைக் கடந்து பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
2007-ல் பாஜகவின் முரளி மனோகர் ஜோஷி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் விநியோகத்தில் புதிய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவான போக்கு குறித்தும், நாட்டின் பாதுகாப்பு குறித்தும் கவலையை வெளிப்படுத்தி இருக்கிறார்.தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நவீனத்துவம் கொண்டுவரப்படும்போது உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இதுபோன்ற முதலீடுகளை விரிவுபடுத்துவது நமது பாதுகாப்பு நலன்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும் என ஜோஷி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.