இந்தியாவுடனான பகையுணர்வை பாகிஸ்தான் இன்னமும் மறக்க வில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார்.
அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. அந்தக்கூட்டத்தில் மோகன்பாகவத் பேசியதாவது: நாடுசுதந்திரம் பெற்றபோது, தனிநாடு வேண்டும் என்று போராட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக, பாகிஸ்தான் தனிநாடு உதயமானது. அதன்பிறகு, பாகிஸ்தான் உடனான பகையுணர்வை இந்தியர்கள் மறந்து விட்டனர். ஆனால், பாகிஸ்தானியர்கள் இன்னமும் மறக்க வில்லை. இதுதான் ஹிந்துக்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையிலான வேறுபாடு ஆகும்.
மனிதநேயம் பற்றி பலரும் பேசுகிறார்கள். ஆனால், அதன் படி நடப்பதில்லை. மனிதநேயப் பண்புகளை இந்தியா உலக நாடுகளுக்கு எடுத்துச்சொல்கிறது. ஹிந்துத்துவ உணர்வை இந்தியர்கள் மறந்தால், இந்தநாட்டுடன் அவர்கள் கொண்டிருக்கும் தொடர்பு துண்டிக்கப் பட்டு விடும் என்றார் அவர்.
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.