தமிழ்மொழி சமஸ்கிருதத்தை விடத் தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடியின் கூற்று பெருமிதம்தருகிறது என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, தமிழ் மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என புகழாரம் சூட்டினார். மேலும் பேசியவர், “பழமையான தமிழ்மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என்பது நிறையபேருக்குத் தெரியாது. நிறைய அழகுகளை தன்னுள்கொண்டது தமிழ்மொழி. வணக்கம் என்பதை மட்டும்தான் தமிழில் எனக்கு சொல்லத்தெரியும். அதைத்தவிர தமிழில் வேறு எதுவும் தெரியாதது குறித்து வருந்துகிறேன்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடியின் கூற்று பெருமிதம்தருகிறது என பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் வைரமுத்து, “ தமிழ்மொழி சமஸ்கிருதத்தை விடத் தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடி அவர்களின் கூற்று பெருமிதம்தருகிறது; மகிழ்ச்சி. மூத்த மொழிக்கான முன்னுரிமையும் பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன். அதற்கான அறிகுறியென்றே இதை அறிகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.