பெரியார் சிலைதொடர்பாக பேஸ்புக்கில் வெளியான கருத்துகுறித்து பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:
எனது பேஸ்புக் அட்மின் செய்த தவறுகாரணமாக பெரியார் சிலை கருத்து பதிவாகியது. இதை உடனடியாக நீக்கி விட்டேன். அட்மினையும் நீக்கிவிட்டேன்.பெரியார் சிலை குறித்து எனது முகநூலில் எனது அட்மின்போட்ட கருத்து ஏற்புடையதல்ல. சிலைகளை சேதப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. எனது அட்மின்செய்த தவறுக்காக இதய பூர்வமான வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். யாரையும் துன்புறுத்தும் நோக்கம் கிடையாது. எனக்கு தெரியாமல் நடந்த விஷயத்திற்காக வருத்தம்தெரிவித்து கொள்கிறேன்.சிலைகளை சேதப்படுத்த வேண்டாம். அமைதி காக்குமாறு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பேஸ்புக்கில் ராஜா கூறியதாவது:
நேற்றைய தினம் திரிபுராவில் லெனின்சிலை அகற்றப்பட்டதை ஒப்பிட்டு தமிழகத்தில் பெரியார் அவர்களின் சிலைகளும் அகற்றப்படும் என்ற பதிவு பேஸ்புக் அட்மின் என் அனுமதி இன்றி பதித்துள்ளார். எனவேதான் அதை நான் பதிவு நீக்கம் செய்திருந்தேன்.
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ள வேண்டுமே அன்றி வன்முறையால் அல்ல. எனக்கு யார்மனதையும் புண்படுத்தும் நோக்கமில்லை. எனவே இப்பதிவினால் யார் மனதும் புண் பட்டிருக்குமானால் அதற்கு என் இதயபூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் ஈ.வெ.ரா அவர்கள் சிலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்கள் நமக்கு ஏற்புடையதல்ல.
ஆகவே ஆக்க பூர்வமாக, அமைதியான முறையில் நாம் இந்து உணர்வாளர்களை இணைத்து தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும்பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.