"தெலுகு தேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறியது ஆந்திராவில் பாஜக- வளர அருமையான வாய்ப்பு" – பாஜக-வின் ஜிவிஎல் நரசிம்ஹராவ் சொல்வது முற்றிலும் உண்மை.
– சூனியாவின் ஆசியில், தெலெங்கானா – ஆந்திரா என இரண்டாக பிரிந்ததிலிருந்து ஆந்திர தலை நகரை கட்டுகிறேன் என்று எத்தனை ஆயிரம் கோடிகளை அதில் (அமராவதி) நாயுடு செலவழித்தார் என்பதற்கு எந்த கணக்கும் இல்லை. மத்தியிலிருந்து பெறப்பட்ட பல ஆயிரம் கோடிகள், சிங்கப்பூர், ஜப்பான் என வெளிநாடுகளில் போடப்பட்ட ஒப்பந்தம், அதன் மூலம் வந்த கோடிகள் என்ன ஆனது என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். இவருக்கு உறுதுணையாக இருந்தவர் வெங்கய்யா நாயுடு. அவரை துணை ஜனாதிபதி யாக்கியதிலிருந்து சந்திரபாபு நாயுடுவின் குரலை பாஜக-வில் பிரதிபலிக்க சரியான ஆளில்லாமல் போனது.
நிர்மலா சீதாராமன் – அமீத் ஷா போன்றோர் ஆந்திரா வந்து செல்வதோ, பாஜக ஆந்திராவில் வளர்வதோ, நாயுடுவுக்கு பிடிக்காத விஷயங்கள்.
ஆந்திரா கவர்னர் நரசிம்ஹனை சந்திரபாபு நாயுடு மாற்ற கோரியும் மோடி செவி சாய்க்காததும், நாயுடுவின் ஊழல்களை அவரது உறவினர்களே வெளிக் கொணர்ந்ததும் நாயுடுவுக்கு கடுப்பு.
ஆந்திர – தெலெங்கானா மாநில மக்களும், ஒரு முறை மாநில கட்சியை தேர்ந்தெடுப்பது – மறு முறை தேசிய கட்சியை தேர்ந்தெடுப்பது என்றிருப்பதால், மீண்டும் ஆட்சியை தக்க வைக்க நாயுடு புது – தேசிய கூட்டணி – முகத்துடன் வர இந்த முடிவு என்கிறார்கள்.
"காங்கிரஸ் – பாஜக இல்லாத கட்சிகளோடு கூட்டணி", என்று நாயுடுவை போல யோசிக்கும் குறுக்கு புத்திக்காரர், ஜிஹாதி மிஷநரி அடிவருடி – சந்திரசேகர ராவ் ஏற்கனவே அறிவித்து நாயுடுவின் திட்டத்தை பிசுபிசுக்க வைத்திருக்கிறார்.
நாயுடு யாருடன் கூட்டு வைக்க முடியும்? மாநிலத்தை உடைத்த காங்கிரசோடு சேர முடியாது. கம்யூனிஸ்ட்டுகள் பிரயோஜனமில்லை. சமாஜ்வாதி – பகுஜன் போன்ற கட்சிகளுக்கு ஆந்திராவில் இடமில்லை. தனக்கு தானே குழி தோண்டியிருக்கிறார் நாயுடு.
அதே சமயம், ஆந்திர பாஜக-வுடன் கூட்டு சேர அங்கிருக்கும் இதர மாநில கட்சிகள் – ஜெகன் மோகன் ரெட்டி கட்சி உட்பட – தயார்.
சமீபத்தில், "ஆந்திராவை பிரித்து கொடுங்கள்" என்று கோரிக்கை வைத்ததோடு இவருக்கிருந்த மரியாதை முற்றிலுமாக தீர்ந்தது.
சுயநலம்…!
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.