பாஜக.,வுக்கு மிகப்பெரிய பின்னடைவு அல்ல, அலசி ஆராயப்பட வேண்டிய ஒன்று

உத்தரப் பிரதேச, பீகார் மாநில லோக்சபா இடைத் தேர்தல் தோல்வி பாஜக.,வுக்கு  மிகப்பெரிய பின்னடைவு அல்ல. அதேநேரத்தில் அலசி ஆராயப்பட  வேண்டிய ஒன்று. ஒட்டு மொத்த எதிர்க் கட்சிகளின் மிகை படுத்தப்பட்ட கொண்டாட்டங்களுக்கு நாம் எரிச்சல் பட வேண்டியதும் அல்ல. அவர்கள் பாஜக.,வை கண்டு எந்த அளவிற்கு பயத்தில் உள்ளார்கள் என்பதன் வெளிப்பாடே அது  .

1980ம் ஆண்டு துவங்கப்பட்ட பாஜக 1984ம் ஆண்டு 2 எம்.பி.,க்களுடன் தனது அரசியல் கணக்கை தொடங்கி, இன்று 275 லோக்சபா எம்பி.,க்களுடன் தனிப்பெரும் கட்சியாக  காட்சியளிக்கிறது, 20 மாநிலங்களில்  கூட்டணி ஆட்சியையும் நிறுவியுள்ளது. இதை எட்ட அது கடந்த வெற்றி தோல்விகள், ஏற்றத் தாழ்வுகள் ஏராளம், ஏராளம்.

சென்ற 2014ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட போது கூட இதே மிகை மகிழ்ச்சி எதிர் கட்சிகளிடம் மேலோங்கியது. 100 தொகுதிகளை தாண்டுவது கூட கடினம் என ஆருடம் கூறி வந்தது. பாஜக கூட்டணியில் இருந்து நிதிஸ் குமாரின் (ஜனதா தளம்) விலகல் மேலும் அவர்களுக்கு உற்சாகத்தை தந்தது.

ஆனால் தேர்தலில் வென்றதோ 28 கட்சிகளை உள்ளடக்கிய பாஜக  கூட்டணி. இந்த கூட்டணி  336 தொகுதிகளில் வென்று ஆட்சியை பிடித்தது. இதில் ஒரு சில கட்சிகளை தவிர 23 கட்சிகள் மிக சிறிய கட்சிகளே. பீகாரில் மோடிக்கு ஆதரவு தந்தால் சிறுபான்மை ஓட்டுக்கள் போய்விடும் என்று அஞ்சி ஒதுங்கிய நிதிஸ் வென்றது 2 தொகுதி, பாஜக.,கூட்டணி வென்றதோ 29 தொகுதி.

பாஜக எங்கெல்லாம் அசூர பலம் பெறுகிறதோ, அங்கெல்லாம் எதிர், எதிர் துருவங்கள் எல்லாம் கைக் கோர்ப்பது, கைக் கோர்க்க முயல்வது வரலாராகி வருகிறது.  அதன் ஒருபகுதிதான் நிதிசும், லல்லுவும் பிகாரில் கண்ட கூட்டணி, மேற்கு வங்கத்தில் பரம வைரியான கம்யூனிஸ்டும், மம்தா பானர்ஜியும் காண துடிக்கும் கூட்டணி.

உ.பி.,யில் புல்பூர் ,கோரக்பூர் லோக்சபா தொகுதிகளில் வெல்ல சமாஜ் வாதி, பகுஜன் சமாஜ், கம்யூனிஸ்ட், சிறுபான்மை அமைப்புகள் இனைந்து தற்போது கண்டுள்ள கூட்டணி, இந்த கூட்டணி தேர்தல் கணக்குப்படி மட்டுமே பாஜக.,வை வென்றுள்ளது.

ஆனால் உண்மையான தோல்வி பாஜகவுக்கு அல்ல. 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாத!, 2017 உ.பி., சட்ட மன்ற தேர்தலில் 403.,னில், 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற!!, தற்போது இடைத்தேர்தலில் கூட வேட்பாளர்களை நிறுத்த திராணி இல்லாமல் தேய்ந்து போயுள்ள, உபி.,யை இரு முறை ஆண்ட மாயாவதியின் பகுஜன் சமாஜினுடையது.

தங்கள் ஆட்சின் சாதனைகளையோ, பாஜக ஆட்சியின் நிர்வாகத்தையோ குறைக் கூற திராணி இல்லாத, பல முறை உ.பி.,யை ஆண்ட போதும், தங்களது பரம வைரியான மாயாவதியுடனான கூட்டணியை மட்டுமே நம்பி களம் கண்ட  முலாயம் சிங், அகிலேஷ் யாதவின் சமாஜ் வாதியினுடையது.

மேலும் இடைத் தேர்தல்களில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வது இல்லை. பாஜக.,வும் தெருவுக்கு, தெரு தங்கள் அமைச்சர்களை இறக்கி பணத்தை வீசுவதும் இல்லை. மத்திய, மாநில அரசுகளை குறை கூறும் அளவிற்கு ஊழலோ, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளோ எழவில்லை. மாறாக ஆயுதம் தரித்த ரவுடிகளின் கூடாரமாக இருந்த உ.பி.,யை 1100 என்கவுண்டர்கள், மற்றும் 40 ராவுடிகளை சுட்டு கொன்றதன் மூலமாக ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கி உள்ளது யோகி அரசு.  இதை வைத்தே  முதலீட்டாளர்கள் மாநாட்டில் லட்சம் கோடியை திரட்டியுள்ளது யோகி அரசு.

எனவே மக்களிடம் குறிப்பிட்டு கூறும் படியான அதிருப்தி இல்லை, 50%.,க்கும் குறைவான வாக்கு பதிவு இதை நிருபனமாக்குகிறது. ஆனால் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தவர்களில்  பெரும்பாலானவர்கள்   எதிர் கட்சியினர் என்றால் அது மிகையாகாது.  

நன்றி; தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...