இந்திய பிரதமர் நரேந்திரமோடி , எம்.பி.க்கள் ஒவ்வொருவரும், தங்களது டுவிட்டர் பக்கங்களில் 3 லட்சம் என்கிற எண்ணிக்கையில் பின் தொடர்பவர்களை ஈர்க்குமாறு அறிவுறுத்தி யுள்ளார். பாஜக. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அதில் தொழில் நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி அரசின் செயல் பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு எம்.பிக்களை மோடி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அரசின் சாதனைகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக எடுத்துரைப்பது எப்படி? என்கிற விளக்கமும் கூட்டத்தில் திரையிடப் பட்டது. ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது ட்விட்டர் பக்கங்களில் 3 லட்சம் ஃபாலோயர்களை கொண்டிருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும். |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.