காவிரி மேலாண்மை வாரியமும், மேற்பார்வைக் குழுவும் ஒன்றுதான் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எம்பி-க்கள் ராஜினாமாசெய்ய வேண்டும் என திமுக கூறிவருகிறது. முதலில் இந்தகோரிக்கையை வலியுறுத்தி திமுக எம்எல்ஏக்கள், எம்பி-க்கள் ராஜினாமா செய்யவேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் என்ன காவிரி மேற்பார்வை குழுவை அமைத்தால் என்ன இரண்டும் ஒன்று தான். காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை எடுத்துக்கூற தமிழகத்தில் இருந்து பாஜகவைச் சேர்ந்த இல.கணேசன், பொன்.விஜயராகவன், கருப்பு முருகானந்தம் ஆகிய 3 பேரை டெல்லிக்கு அனுப்ப உள்ளோம். இவர்கள், காவிரிதொடர்பான விரிவான தகவல்களை தெரிவிப்பார்கள்.
ஈரோட்டில் மண்டல மாநாடு என்ற பெயரில் பாஜக எதிர்ப்பு மாநாட்டை திமுக நடத்தியுள்ளது.
நாத்திக அரசியலில் இருந்து ஆத்திக அரசியலுக்கு தமிழ்நாடு மாறும். பாஜக வலுப்பெற்றுவருகிறது. சென்னையில் வரும் ஏப். 8-ம் தேதி மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம். மத்திய அரசின் திட்டங்களை, சாதனைகளை மக்களிடம் விளக்க உள்ளோம்.
காவிரி பிரச்சினையால் தமிழகம் பல ஆண்டு காலமாக பாதிக்கப் பட்டுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்க ஆக்கப் பூர்வமான செயலில் மத்திய அரசு இறங்கியுள்ளது என்றார்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.