இந்தியாவிலேயே சிறந்தபொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு

இந்தியாவிலேயே சிறந்தபொறியியல் கல்லூரியாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்விநிறுவனம் (ஐஐடி-எம்) தேர்வு செய்யப் பட்டுள்ளது. சிறந்த கல்வி நிறுவனமாக பெங்களூரு ஐ.ஐ.எஸ்.சி நிறுவனம் தேர்வாகியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், நிகழாண்டுக்கான தரவரிசைப் பட்டியலை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்றுவெளியிட்டது.

அதில், நாட்டிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னையில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கல்விநிறுவனம் (ஐஐடி-எம்) தேர்வாகியுள்ளது. அதேபோல், சிறந்த கல்வி நிறுவனமாக பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (ஐஐஎஸ்சி) தேர்வு செய்யப் பட்டுள்ளது.

இந்நிலையில், சிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனமாக குஜராத்மாநிலம் அகமதாபாதில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐஐஎம்-ஏ) தேர்வு செய்யப்பட் டிருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ‘மிராண்டா ஹவுஸ்’, நாட்டிலேயே சிறந்தகல்லூரி என்ற பெருமையை பெற்றுள்ளது.

சிறந்த மருத்துவக் கல்லூரியாக டெல்லி எய்ம்ஸும், சிறந்த சட்டக்கல்லூரியாக பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகமும் தேர்வாகியுள் ளது.

சிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் சென்னை பல்கலைக்கழகம் 18-வது இடத்தைப் பிடித்து தரவரிசைப்பட்டியலில் முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் சென்னைப் பல்கலைக்கழகம் 41-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...