புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் குறித்த நாடு தழுவிய இயக்கத்தை கல்வி அமைச்சகம் தொடங்கியது

புகையிலை பயன்பாடு இந்தியாவில் தடுக்கக்கூடிய இறப்புகள் மற்றும் நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.35 மில்லியன்இறப்புகளுக்கு இது காரணமாகிறது. புகையிலை உற்பத்தியிலும், பயன்பாட்டிலும் இந்தியாஇரண்டாவது இடத்தில் உள்ளது. உலகளாவிய இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு 2019-ன் படி, நாடு முழுவதும் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களில் 8.5 சதவீதம் பேர் வெவ்வேறு வடிவங்களில் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

நமது பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களைச் சுற்றி பல்வேறுவடிவங்களில் புகையிலைபொருட்கள் எளிதாக கிடைப்பது இந்நிலைக்கு முக்கியக் காரணிகளில் ஒன்றாக நம்பப்படுகிறது.

தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், புகையிலை பயன்பாட்டிலிருந்து சிறார்களையும் இளைஞர்களையும் பாதுகாப்பதற்கான புகையிலை இல்லாத கல்வி நிறுவனம் என்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை பள்ளிகளுக்கான “புகையிலை இல்லா கல்வி நிறுவன செயல்பாட்டு கையேட்டை” உருவாக்கி, 2024 மே 31 அன்று, உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள் புகையிலை இல்லாத வழிகாட்டுதல்களுக்கு இணங்க புகையிலை இல்லாத பகுதியாக கல்வி நிறுவனங்களை #Tobacco Free Area மாற்றுவதே இதன் நோக்கமாகும். இந்தக் கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய வழிகாட்டுதல்கள்.

 

· கல்வி நிலைய வளாகத்திற்குள் புகையிலை இல்லாத பகுதி’ என்ற அறிவிப்புப் பலகையை காட்சிப்படுத்தவும்.

· கல்வி நிறுவனத்தின் நுழைவாயில் / சுற்றுச்சுவரில் “புகையிலையற்ற கல்வி நிறுவனம்” என்ற அறிவிப்புப் பலகையை காட்சிப்படுத்தவும்.

· பீடி  / சிகரெட் அல்லது தூக்கியெறியப்பட்ட குட்கா / புகையிலை பைகள், துப்பும் இடங்கள் போன்ற புகையிலை பயன்பாட்டிற்கான எந்த ஆதாரமும் வளாகத்திற்குள் இருக்கக்கூடாது.

· புகையிலையின் தீங்குகள் குறித்த சுவரொட்டிகள் மற்றும் பிற விழிப்புணர்வு பொருட்களை கல்வி நிறுவனங்களின் வளாகத்திற்குள் காட்சிப்படுத்த வேண்டும்.

· கல்வி நிறுவனங்களில் குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது புகையிலை கட்டுப்பாடு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

· கல்வி நிறுவனங்களின் நடத்தை விதிகளில் “புகையிலை பயன்படுத்தாமை” வழிகாட்டு நெறிமுறைகளை சேர்க்க வேண்டும்.

· கல்வி நிறுவனத்திலிருந்து 100 அடிக்குள் உள்ள கடைகளில் எந்தவிதமான புகையிலைப் பொருட்களும் விற்பனை செய்யக்கூடாது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கி ...

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் – சிவராஜ் சௌகான் நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் என ஜனாதிபதி ...

காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் -பி ...

காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் -பிரதமர் மோடி ஆலோசனை காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை ...

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ...

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை L -முருகன் தொடங்கிவைத்தார் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிதாக வாரம் இரு முறை ...

இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்த ...

இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்துழைப்பை வேளாண்மை துறையில் அதிகரிக்க முடிவு இந்தியா, மலேசியா ஆகிய இருநாடுகளும், வேளாண்மை துறையில் குறிப்பாக, ...

நமது நம்பிக்கைகளுக்கான சிறகுக ...

நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள் தொகுப்பு 1 நூல்களை சிவராஜ் சௌகான் வெளியிட்டார் "நமது நம்பிக்கைகளுக்கான சிறகுகள்" தொகுப்பு 1 (Wings to ...

தி.மு.க.வின் கொள்கைகளை மாணவ சமுத ...

தி.மு.க.வின் கொள்கைகளை மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம் -அண்ணாமலை ‛‛திமுகவின் கொள்கைகளை, மாணவ சமுதாயத்தின் மீது திணிப்பதை எதிர்க்கிறோம் ...

மருத்துவ செய்திகள்

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...