ஊழல் மற்றும் கிரிமினல் குற்றம்புரிந்த அரசியல்வாதியை ராகுல் சந்தித்தது வேடிக்கையாக இருப்பதாக பாஜ. தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
கர்நாடகா சட்டசபைக்கு மே 12-ல் தேர்தல் நடக்கிறது. கோலார் மாவட்டத்தில் பா.ஜ. வேட்பாளரை ஆதரித்து பா.ஜ. தேசியதலைவர் அமித்ஷா பேசியதாவது: ஊழல் மற்றும் கிரிமினல் குற்றவழக்கில் சிக்கிய அதிகாரிகள் , அரசியல் வாதிகளை பதவி பறிப்பில் இருந்து காக்கும் அவசரசட்டம் முந்தைய மன்மோகன் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அப்போது பதவியை பறிகொடுத்த கால்நடை தீவன ஊழல் குற்றவாளி லாலுவை காப்பாற்றும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்தின் நகலை பத்திரிகையாளர்கள் முன்பாக கிழித்துவீசியவர் இப்போதைய காங். தலைவர் ராகுல். இப்போது அதேகுற்றவாளியான லாலுவை எய்ம்ஸ் மருத்துவனைக்கு நேரில்சென்று உடல் நலம் விசாரிப்பது வேடிக்கையாக உள்ளது. ராகுலை 2019-ம் ஆண்டு தேர்தல் படுத்தும்பாடுதான். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.