டெல்லியில், புத்த பூர்ணி மாவையொட்டி, மத்திய கலாசார அமைச்சகம் ஏற்பாடுசெய்த நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டு, புத்தரின் 2,562-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஜப்பான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்துவந்த புத்த துறவிகளுக்கு அவர் புனித வஸ்திரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், பிரதமர்மோடி பேசியதாவது.
புத்தரின் போதனைகள், மனிதா பிமானம், கருணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டவை. இவை இன்றும் பொருத்த மானவையாக உள்ளன. இந்த போதனைகள் புத்தரால் உலகம் முழுவதும் பரவியதால், இந்தியாவின் குணநலன் பற்றி உலகம் அறிந்துகொண்டது.
புத்தரின் போதனைகள் இந்தியாவில் இருந்து உதயமானது என்பதில் இந்தியா பெருமைப் படுகிறது. இந்தியா, மதங் களிடையே பாகுபாடு காட்டியது இல்லை. எல்லாமதத்தினரும் அவரவர் நம்பிக்கையை பின்பற்ற உரிமை உண்டு.
இந்தியா பிறநாடுகளையோ, அவர்களின் சித்தாந்தங்களையோ தாக்கியதாக வரலாறு இல்லை. இந்தகொள்கையை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக பின்பற்றி வருகிறோம். இவ்வாறு மோடி பேசினார்.
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.