ஏழைகளையும், விவசாயி களையும் கண்டு கொள்ளாமல் காங்கிரஸ் கட்சி புறந்தள்ளி விட்டது என்று பிரதமர்மோடி கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசினார்.
கர்நாடக மாநிலத்தில் 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 12-ம்தேதி தேர்தல் நடக்கிறது. 15-ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இந்தத்தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில்,பாஜக. தீவிரமாக பிரச்சாரம்செய்து வருகிறது. ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் காங்கிரசும் தீவிரபிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில், தும்கூரு நகரில் நேற்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் தேவகவுடா கட்சியை விமர்சித்துள்ளார். அப்போது அவர்பேசியதாவது:
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை பாதுகாக்கும் கட்சியாக தேவக வுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளம் இருந்து வருகிறது. தேவகவுடாவுடன் காங்கிரஸ் கட்சி ரகசியமாகக் கூட்டுவைத்து மாநிலத்தில் ஆட்சி நடத்திவருகிறது. கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகளையும், ஏழைகளையும் புறந்தள்ளி விட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் வறுமையை ஒழித்துவிடுவோம் என்று கூறியே காங்கிரஸ் கட்சி வாக்கு கேட்கிறது. கர்நாடகத்தில் மாற்றத்தை உண்டாக்க முடியுமென்றால், அது பா.ஜ.க.வால் மட்டுமேமுடியும் என்று கூறுகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் இடையே ஏதாவது ரகசியகூட்டு இருக்கிறதா என்பதை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்த வேண்டும். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை காங்கிரஸ் ஆண்டுள்ளது. ஒரு குடும்பம்தான் அனைத்து அதிகாரத்தின் மையாக இருந்திருக் கிறார்கள், இவர்கள் ஏழைகளையும், விவசாயிகளையும் கண்டு கொள்ளாமல் புறந்தள்ளி விட்டனர். ஆனால், ஒருஏழையின் மகன் (மோடி) பிரதமராக வந்த பின், அவர்கள் வாய்மூடி விட்டார்கள். ஏழ்மை குறித்து அவர்கள் பேசுவதில்லை. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.