கொஞ்சமேனும் துணிவிருந்தால் காங்கிரஸ் தனியாக நிற்கலாமே

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இன்னொரு புறம் அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குழுவாகப் போட்டியிட்டனர். இவ்விரு கட்சிகளையும் கூட்டணி பலத்தை நம்பாமல் தன்னந்தனியாக களம்கண்டு தமிழகம் முழுவதும் பரவலான வெற்றிகளையும், கணிசமான வாக்குப் பதிவுகளையும், பெற்று, பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக முன்னேறி இருக்கிறது. தமிழக ஊடகங்களும் முக வலைதளங்களும் தமிழக மக்களும் பாஜகவின் இந்த வெற்றியைப் பல கோணங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.

இதுபற்றிய மகிழ்ச்சியை, எம் ஆதரவாளர்களுடனும், தொண்டர்களுடனும், பகிர்ந்து கொண்டபோது தமிழகத்தின் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்து இருப்பதைச் சுட்டிக்காட்டி பேசினேன். இதைக் கேட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் அவர்கள், மூன்றாவது கட்சி தாங்கள்தான் என்று வெகுண்டெழுந்து இருக்கிறார்; காங்கிரசோடு ஒப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
முதலில் தமிழக காங்கிரஸ் தலைவர் திரு கே எஸ் அழகிரி அவர்கள், பகல் கனவு காண்பதை நிறுத்திக் கொள்ளட்டும். அதிலும் அவர் இன்னும் அந்தக்கால காங்கிரஸ் பற்றிய, பழைய நாட்களின் ஞாபகத்தில் இருந்து கொண்டிருக்கிறார். பெருமைக்குரிய பாரதிய ஜனதா கட்சியை, எப்போதும் எந்த நிலையிலும், நான் காங்கிரஸோடு ஒப்புநோக்கியது இல்லை. அதற்கான அருகதையும், தகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக நான் ஒருபோதும் நினைத்ததில்லை.

தியாகத்தால் உருவான பாஜக, உயர்ந்த எண்ணம், சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான அமைப்பு. இதைப் பரம்பரை முதலாளிகளால் நடத்தப்படும், வணிக நிறுவனமான காங்கிரஸுடன் நான் எப்படி ஒப்பீடு செய்ய முடியும்.

இரண்டாவதாக, பாரதிய ஜனதா கட்சி பெற்ற ஓட்டு சதவீதத்தை, ஒரு சதவீதத்திற்கும் குறைவாகக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். உங்கள் கட்சியில் கணிதம் தெரிந்த யாராவது இருந்தால் அவரைவிட்டு நீங்கள் பாரதிய ஜனதா கட்சி பெற்ற உண்மையான வாக்கு சதவீதத்தைக் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இல்லையேல், எதிரியின் பலம் என்னவென்று தெரியாமல் தோற்கும் நிலை உங்களுக்கு ஏற்பட்டுவிடும்.

அடுத்ததாக, திமுக தலைமையில் ஏற்பட்டுள்ள ஒரு மெகா கூட்டணியில், 13 கட்சிகளில் ஒரு கட்சியாக இருக்கும் அனுமதியை, தங்களுக்கு திமுக வழங்கியிருக்கிறது. 13 கூட்டணிக் கட்சிகளின் பலத்திலே, தாங்கள் பெற்ற இந்த வெற்றியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் தனிப்பட்ட வெற்றி என்றா? தங்களுக்கு கொஞ்சமேனும் துணிவிருந்தால் எங்களைப்போல தனியாகக் களம் காண முடியுமா? உங்களுக்கு வாக்காளர்கள் கிடைப்பார்களா? என்பதைவிட வேட்பாளர்கள் கிடைப்பார்களா? என்பதுதான் மிகப் பெரிய சவாலாக இருக்கும். உங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கழுத்தைப் பிடித்துத் தெருவில் தள்ளிய திமுகவின் காலடிச் சுவட்டில் மண்டியிட்டு அமர்ந்து கொண்டு விட்டோம் என்ற துணிவில் பேசி இருக்கிறீர்கள். தங்கள் பெற்றிருப்பது, மக்களிடம் வெற்றியல்ல. திமுகவிடம் இருந்து ”ஈ” என இரந்து பெற்ற உங்கள் வெற்றிக்கு, உங்களுக்கு இறுமாப்பு எப்படி வருகிறது? காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் பதவி சுகத்துக்காக கட்சி மாறி, கட்சி மாறி கூட்டணி வைத்து, தமிழகத்தில் காங்கிரஸ் இருக்கும் இடம் இல்லாமல் செய்த சாதனைக்கு மட்டும்தான் நீங்கள் சொந்தக்காரர்கள். மானமுள்ள எந்த உண்மையான காங்கிரஸ் தொண்டனும், கட்சியை வளர்க்க தனியாக போட்டியிடுவதை மட்டும்தான் விரும்புவான்.

ஆக, ஒட்டுண்ணியாக, சாறுண்ணியாக தாங்கள் ”ஈ” என இரந்து பெற்ற வெற்றியை, எங்கள் உண்மைத் தொண்டர்களின் மானத்தை மதித்து, உழைப்பை மதித்து, பணபலம் இல்லாமல், நேர்மையாக மக்களைச் சந்தித்த எங்கள் வெற்றியுடன், நான் ஒருபோதும் ஒப்பிட மாட்டேன். தாங்கள் ஒப்புக் கொண்டாலும், ஒப்புக் கொள்ளாவிட்டாலும், இப்போதைக்குத் தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய கட்சி பாரதிய ஜனதா கட்சியாகிய நாங்களே.

நன்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.