தமிழ்நாட்டில் நீட்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் இதரமாநிலங்களில் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போதும், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நீட்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 31 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே, நீட்தேர்வை நடத்தும் மத்திய இடைநிலை கல்வி வாரியமான CBSE, கடந்த ஆண்டில் 149ஆக இருந்த தேர்வு மையங்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டு 170ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் நீட்தேர்வு எழுதும், ஒருலட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவர்களுக்கு, அந்த 170 மையங்களில் இடம் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு கூடுதலாக, 25 ஆயிரத்து 206 மாணவர்களுக்கு தமிழ்நாட்டில், தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும், தேர்வு மையங்களுக்கான தட்டுப்பாடு எழுந்ததாகவும், இந்தநிலை, தமிழ்நாடு மட்டுமின்றி, பிற மாநிலங்களில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், மதுரை, திருச்சி, திருநெல்வேலியைச் சேர்ந்த நீட்தேர்வெழுதும் மாணவர்களுக்கு, சென்னைக்குப் பதிலாக, அவர்களுக்கு அருகே இருக்கும் கேரள மாநிலத்தின் எர்ணாகுளத்தில் தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழை தேர்வுமொழியாக குறிப்பிட்டுள்ள 24 ஆயிரத்து 720 மாணவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.