கர்நாடக முதல்வராக பா.ஜ.க-வின் எடியூரப்பா பதவியேற்க ஆளுநர் அதிகாரப் பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 12-ம்தேதி நடந்த கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் நேற்று அறிவிக்கப் பட்டன. இதில் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையான இடங்கள் எந்தக்கட்சிக்கும் கிடைக்கவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களிலும், காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி 37 இடங்களிலும், மற்றகட்சிகள் 3 இடங்களிலும் வெற்றிபெற்றன. ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி ஆட்சியமைக்க ஆதரவு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸின் ஆதரவை ஏற்றுக்கொண்ட குமாரசாமி, தங்களுக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி ஆட்சியமைக்க உரிமைகோரினார். இதற்கிடையே, 104 எம்.எல்.ஏ-க்களைக் கொண்ட பா.ஜ.கவும் எடியூரப்பாவும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில்தான், பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்த பின்பு ஆளுநர் இந்தமுடிவை அறிவித்துள்ளார். மேலும் பதவியேற்றபின் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என எடியூரப்பாவுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.