மோடியின் முயற்சியால் இணையப்போகிறது கோதாவரியும் காவிரியும்

காவிரியில் 5, 10 டி.எம்.சி தண்ணீருக்க அடித்துக்கொண்டிருக்கிறோம்… ஆனால், ஒவ்வொரு ஆண்டும் கோதாவரி ஆற்றில் மட்டும் 3000 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்றால் நம்புவீர்களா? உண்மைதான்… இந்த தண்ணீரை தமிழகத்துக்குத் திருப்பிவிட்டால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இருக்காது என்று தோன்றுகிறது அல்லவா… இதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது என்பதுதான் நம் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் தகவல். இதற்காக, தெலங்கான, ஆந்திரா, தமிழக அரசுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். தெலங்கானா, ஆந்திரா இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. வாருங்கள் இதன் பின்னணி பற்றி தெரிந்துகொள்வோம்…

இந்தநிலையில், கோதாவரி – காவிரி இணைப்பை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன்மூலம், கோதாவரியில் வரக்கூடிய அதிகப்படியான தண்ணீர் வறட்சியான தெற்கு ஆந்திரா வழியாக பாய்ந்து தமிழகத்தை செழிக்கச் செய்யும். இதற்காக, கோதாவரியில் இருந்து கால்வாய் வெட்டி கிருஷ்ணா நதியை இணைப்பது. கிருஷ்ணா நதியில் இருந்து பெண்ணாறு நதியை இணைப்பது. பெண்ணாற்றில் இருந்து கால்வாய் அமைத்து காவிரியை இணைப்பது என்று திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய திட்டத்துக்கு தேவையான 90 சதவிகித நிதியை மத்திய அரசே அளிக்கிறது. மீதம் உள்ள 10 சதவிகித நிதியை மட்டும் தமிழகம், ஆந்திரா, தெலங்கான அரசுகள் ஒதுக்கினால் போதும் என்கிறார் நிதின் கட்கரி.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 3000 டி.எம்.சி-யும் தமிழகத்துக்கு வரும் என்று நினைப்பது பேராசை. முதல் கட்டமாக 100 டி.எம்.சி வரையிலான தண்ணீர் கிடைக்கும் என்கின்றனர் பொறியாளர்கள். மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதற்கெடுத்தாலும் அடித்துக்கொள்ளும் தெலங்கான – ஆந்திரா அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று மத்திய அரசு பயந்தது. ஆனால், நல்ல வேளையாக ஒரு சில நிபந்தனைகளை மட்டும் விதித்து தமிழர்களின் வயிற்றில் நீர் வார்த்திருக்கின்றன இரு மாநில அரசுகள்.

இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு, டெல்லியில் மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தலைமையில் கூட்டம் நடந்தது. அதில் தெலங்கானா மாநிலம் சார்பில் அந்த மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவ், ஆந்திர மாநிலத்தின் நீர்பாசனத்துறை அமைச்சர் தேவிநினி உமா மகேஸ்வர ராவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, உபரியாக கடலில் கலக்கும் சுமார் 3000 டிஎம்சி கோதாவரி ஆற்று நீரை வருடம் ஒன்றுக்கு தடுத்து சேகரிக்க முடியும் எனத் திட்டத்தை நித்தின் கட்காரி எடுத்துரைத்தார்.

திட்டத்தின் சுருக்கம்: நதி இணைப்பு திட்டத்தில் என்.டபிள்யூ. டி. ஏ., என்ற தேசிய நீர் மேம்பாட்டு ஏஜென்சி துவக்கத்தில் நதி இணைப்பு திட்டத்தில் ஒன்பது இணைப்புகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தது. அதற்கு ஏற்றவாறு தான் திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. அதன்படி, மகாநதி – கோதாவரி இணைப்பு, இஞ்சபள்ளி – நாகார்ஜுனா சாகர் இணைப்பு, இஞ்சபள்ளி – புலிசிந்தலா இணைப்பு, போலாவரம் – விஜயவாடா இணைப்பு, அல்மாட்டி – பெண்ணாறு இணைப்பு, ஸ்ரீசைலம் – பெண்ணாறு இணைப்பு, நாகார்ஜுனா சாகர் – சோமசீலா அணை இணைப்பு, சோமசீலா அணை – கல்லணை இணைப்பு, காவிரி – வைகை -குண்டாறு இணைப்பு ஆகிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன் தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில், இந்திராவதி ஆறு, கோதாவரியுடன் இணையும் இடமான இஞ்சபள்ளியில் அணை கட்டும் திட்டமும் இன்னும் முடியவில்லை. எனவே, ஒட்டுமொத்த திட்டத்தையும் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ள என்.டபிள்யூ.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. இந்திராவதி – காவிரி முதல் கட்டத்தில் கோதாவரியின் துணை ஆறான இந்திராவதியின் உபரி நீர், மூன்று இணைப்புகள் மூலம் காவிரி படுகையில் கொண்டு சேர்க்கப்படும்.

இதன்படி, தெலுங்கானாவில் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் அக்னிபள்ளி என்ற இடத்தில் இந்திராவதி – கோதாவரி இணைப்பு ; நாகார்ஜுனா அணை – சோமசீலா அணை இணைப்பு; பெண்ணாறு( சோமசீலா) – காவிரியின் கல்லணை இணைப்பு மேற்கொள்ளப்படும். அக்னிபள்ளி தடுப்பு அணையில் இருந்து இந்திராவதியின் உபரி நீர் கோதாவரிக்கு கொண்டு வரப்படும். அங்கிருந்து நாகார்ஜூனா அணைக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து சோமசீலா அணைக்கும், பின்னர் கல்லணைக்கும் கொண்டு செல்லப்படும்.

திட்டத்துக்கு இரு மாநிலங்களும் ஒப்புதல் அளித்தது எப்படி? துவக்கத்தில் தென் மாநில நதிகள் இணைப்பு திட்டத்தை இரு மாநில அரசுகளும் ஏற்கவில்லை. கோதாவரியில் மேற்கொள்ளப்படும் நீர்பாசன திட்டங்கள் முழுமையடைந்த பிறகு, கோதாவரியில் உபரி நீருக்கு வாய்ப்பே இருக்காது என இருத்தரப்பும் கூறிவிட்டன. இருப்பினும், அவர்களை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சம்மதிக்க வைத்தார். கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதி நீர் விஷயத்தில் இரு மாநிலங்களின் உரிமைகளும் பறிபோகாது எனவும் நதி இணைப்பு திட்டத்தின் செலவில், 90 சதவீதத்தை மத்திய அரசே மேற்கொள்ளும். 10 சதவீத தொகையை தான் சம்பந்தப்பட்ட மாநில அரசு மேற்கொள்ள வேண்டி இருக்கும் எனவும் நித்தின் கட்காரி விளக்கினார்.

இதனை அடுத்து திட்டத்துக்கு சில நிபந்தனைகளோடு இரு மாநில பிரதிநிதிகளும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தன. தெலங்கானா மாநிலத்தின் நிபந்தனைகள்… (1) நீர் வளத்தை மறுஆய்வு செய்ய வேண்டும். (2) திட்டத்துக்கு மாற்றான வழிகளையும் மத்திய அரசு ஆராய வேண்டும். (3) சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாத மாற்று திட்டத்தையும் தேர்வு செய்ய வேண்டும். இந்த மூன்று நிபந்தனைகளையும் திட்டத் துவக்கத்தின் முன் அளிக்க வேண்டும் என தெலங்கானா தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த திட்டம் நிறைவேறினால், 7.5 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இந்த திட்டத்துக்கு 47 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படும். அக்கினிபள்ளியில் அணைக்கட்டு அமைக்க வேண்டியிருக்கும். இதனால், 55 ஆயிரம் மக்கள் அந்த பகுதியை விட்டு வெளியேற இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 2019 மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த நதி இணைப்பு திட்டத்தை விரைந்து மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசியலோ, ஆதாயமோ… மக்களுக்கு நல்லது நடந்தால் சரி… இதுவரை ஆண்ட யாராலும் முடியாத காரியத்தை முடித்தாலே போதும் லட்சக் கணக்கான மக்கள், தலைமுறை தலைமுறையாக மோடியையும் நிதின் கட்கரியையும் வாழ்த்துவார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...