நான்குக்கு பூஜ்யம் என்ற அபார மதிப்பெண்ணை பெற்ற காங்கிரஸ்

நான்குக்கு பூஜ்யம் என்ற அபார மதிப்பெண்ணை பெற்று அபார தோல்வியை சந்தித்துள்ளனர் , அட அது யாரும் இல்லங்க நம்ம காங்கிரஸ் கட்சிதான், இந்திய அளவில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில்தான் இந்த அபார தோல்வியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது , இந்த அபார தோல்வியை கைப்பற்றுவதற்கும் ஒரு தகுதி வேண்டும் அல்லவா? ஹி ஹி ஹி

பொதுவாக இடைத்தேர்தல் என்பது ஆளும் கட்சிக்கே சாதகமாக இருக்கும் , ஆனால் இவர்கள் ஒருமாநிலம்

இரண்டு மாநிலம் அல்ல மூன்று மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்தும் மண்ணை கவ்வியுள்ளனர் ,

அரியானாவில், காங்கிரஸ்சின் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹிசார் லோக்சபா தொகுதிக்கு இடைதேர்தல் நடந்தது.இதில், காங்கிரஸ் கட்சி சார்பாக பிரகாசும், இந்திய தேசிய லோக் தளம் சார்பாக , அரியானா_முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா வின் மகன் அஜய்சிங் சவுதாலா வும். ஜனஹித் காங்கிரஸ் சார்பில், பா.ஜ.கா..,வின் ஆதரவு பெற்ற குல்தீப் பிஷ்னோய்யும் போட்டியிட்டனர்.

இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.குல்தீப் பிஷ்னோய், 3, 55 , 941 வாக்குகளை பெற்று, அபார வெற்றிபெற்றார். அஜய்சிங் சவுதாலா 3, 49, 618 வாக்குககள் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளர் பிரகாசுக்கு, 1 , 49, 785 ஓட்டுகள் மட்டுமே கிடைத்து அவர் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார்

மகாராஷ்டிராவில் , காடக்வாஸ்லா சட்டசபை_தொகுதி இடைதேர்தலில், பாரதிய ஜனதா கூட்டணி வெற்றிபெற்றது. ஆளும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத_காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரைவிட, பாரதிய ஜனதா வேட்பாளர் பீம்ராவ்தக்பீர், 3,625 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ஆந்திராவின் பன்ஸ்வாடா சட்ட சபை_தொகுதி இடைதேர்தலில், டிஆர்எஸ்., கட்சியின் போச்ராம் ஸ்ரீனிவாச ரெட்டி வெற்றிபெற்றார். காங்கிரஸ் வேட்பாளரை விட, 49 ஆயிரத்து, 899 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

பீகாரின் தராவுண்டா தொகுதிக்கு நடந்த_இடைதேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம் பாரதிய ஜனதா கூட்டணி, மீண்டும் வெற்றிபெற்று தொகுதியை தக்க வைத்துக்கொண்டது.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான அரியானா, மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஒரு தொகுதியை கூட காங்கிரஸ்ஷால் தக்கவைத்து கொள்ள முடியவில்லை ,

 

இதன் மூலம் நிர்வாக திறமையின்மை என்பது செய்றதை எல்லாம் செஞ்சிபுட்டு எனக்கு எதுவுமே தெரியாது என்று அடிக்கடி சொல்லும் பிரதமர் மன்மோகன் சிங் , அடுத்த நட்டு அறிக்கையை எடுத்து படிப்பதில் வல்லவரான நமது வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தீவிரவாதிகள் குண்டு வைத்து அப்பாவிகள் பலரை கொன்ற பிறகு அந்த இடத்துக்கு பாதுகாப்பு தருவதில் வல்லவரான நமது உள்த்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர்களுடன் முடிந்து விடவில்லை, காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஊழல் மற்றும் நிர்வாக திறமையின்மை உள்ளது என்பதன் வெளிப்பாடே இந்த படுதோல்வி .

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...