கட்சியில் வாரிசுகள் இருக்கலாம். கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து

லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறும் அதில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் 370 இடங்கள் கிடைக்கும்.மூன்றாவது முறையாக பா.ஜ., மீண்டும் ஆட்சிஅமைக்கும் காலம் வெகு துாரத்தில் இல்லை. இன்னும், 100 — 125 நாட்களில் அது நடக்கப் போகிறது. 400க்கு மேலான இடங்களில் எங்கள்கூட்டணி வெற்றிபெறும்.

இதை நாங்கள் மட்டும் சொல்ல வில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராஜ்யசபாவில் கூறியுள்ளார்.நாங்கள் முதல்முறை ஆட்சி அமைத்தபோது, முந்தைய அரசுகள் விட்டுச் சென்ற கழிவுகளை அகற்றி, இடிபாடுகளை அகற்றி சரிசெய்தோம்.

இரண்டாவது ஆட்சியின்போது, அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கான அஸ்திவாரத்தை அமைத்துள்ளோம். மூன்றாவதுமுறையாக ஆட்சி அமைக்கும்போது, இந்த நாடு மிகப் பெரும் சாதனைகளை, திட்டங்களை, அறிவிப்புகளை பார்க்கப் போகிறது.

“தற்போதைய அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் இந்தியா உலகின் 3 வது பெரியபொருளாதார நாடாக மாறும்”. தற்போதைய அரசு கிராமப்புற ஏழைகளுக்காக 4 கோடி வீடுகளையும், நகர்ப்புற ஏழைகளுக்காக 80 லட்சம் உறுதியான வீடுகளையும் கட்டியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், 40,000 கிலோமீட்டர் மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் எட்டப்பட்டுள்ளன, 17 கோடி கூடுதல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன, துப்புரவு வசதி 40 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக அதிகரித்துள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒரு விஷயத்தில் மிகவும் உறுதியுடன்இருப்பதை பார்க்கிறேன். அதற்காக அவர்களை பாராட்டுகிறேன். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், என்னுடைய மற்றும் மக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதாக அமைந்துஉள்ளது.

அதாவது, நிரந்தரமாக எதிர்க் கட்சி வரிசையிலேயே இருப்பது என அவர்கள் தீர்மானித்து விட்டனர். பொதுமக்கள் அவர்களை ஆசிர்வதித்து, அந்த எண்ணத்தை நிறைவேற்றி வைப்பர்.

எதிர்க்கட்சி வரிசையிலும் காங்கிரஸ்நீடிப்பது சந்தேகம் தான். அந்தகட்சியின் கதை முடிந்துவிட்டது. ஒன்றுக்கும் உதவாத ஒருபொருளை எத்தனை காலம் தான் விற்க முயற்சிப்பீர்கள்.

விரைவில் உங்கள் கடையை மூடும்நிலை ஏற்படும். அப்போது இங்குள்ள பார்வையாளர் மாடத்தில்தான் அந்தகட்சிக்கு இடம் கிடைக்கும்.

எதிர்க்கட்சிகளின் பரிதாப நிலைக்கு காங்கிரஸ் மட்டுமேகாரணம். இதனால்தான், பல தலைவர்கள் தொகுதியை மாற்றலாமா, ராஜ்ய சபாவுக்கு போகலாமா அல்லது வேறு கட்சிக்கு போகலாமா என்று யோசிக்கத் துவங்கி விட்டனர். காங்கிரசில் பலநல்ல இளந்தலைவர்கள் உள்ளனர்.

ஆனால், அவர்கள் பேச செயல்பட வாய்ப்பளித்தால், வாரிசுக்குகிடைக்கும் விளம்பர வெளிச்சம் மங்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

ஒரு கட்சியில் வாரிசுகள் இருக்கலாம். ஆனால் கட்சியேவாரிசுகள் கையில் இருப்பது ஆபத்தானது.

ஊழல் செய்து, நாட்டை கொள்ளைய டித்தவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே தீர வேண்டும். ஊழல்செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது. ஆனால், அதை சிலர் எதிர்க்கின்றனர். ஊழலில் கொள்ளையடித்த பணம் மீட்கப்படும். கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டேன்.

ஊழல் செய்தவர்களிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் 5,000 கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் பா.ஜ., ஆட்சி காலத்தில் ஒருலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் பதவிவகித்த நேரு, இந்திரா போன்றவர்கள் இந்தியர்களின் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள். இந்தியர்கள் சோம்பேறிகள், எதையும் சாதிக்க தெரியாதவர்கள் என அவர்கள் நினைத்தனர். ஆனால் இந்தஅரசு நாட்டு மக்கள் மீது, குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மீது அபார நம்பிக்கை கொண்டுள்ளது.

அதனால் அவர்கள் அனைத்து துறைகளிலும் சாதனைபுரிகின்றனர். உலகமே அதை பிரமிப்புடன் பார்க்கிறது.இந்தபத்தாண்டு காலத்தில் நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களை செயல்படுத்த காங்கிரஸ் ஆட்சிக்கு 100 ஆண்டுகள் கூட போதுமானதாக இருக்காது. மூன்றாவது முறையாக என் தலைமையில் அமையப்போகும் ஆட்சி, இந்தியாவை உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக மாற்றும் என்பது இந்த மோடியின் கேரன்டி.

பார்லிமென்டில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பேசியது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...