நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்பது உங்கள்முகத்தில் வெளிப்படும் நம்பிக்கையில் தெரிகிறது. மும்பை ஐஐடி-க்கு ஆயிரம்கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிடுகிறேன். ஐஐடி மாணவர்களால் தான் இந்திய ஐடி துறை வளர்ச்சி அடைகிறது. இந்திய தொழில்நுட்பத் துறை வளர்ச்சியை நீங்கள்தான் படிப்படியாக கட்டமைத்து வருகிறீர்கள்.
கண்டுபிடிப்பு தான் 21-ஆம் நூற்றாண்டின் மந்திரச்சொல்லாக உள்ளது. அது இல்லாத சமூகம் வளர்ச்சியில் தேக்கமடைந்து விடும். இளம் தொழில்முனைவோரின் களமாக இந்தியா உருவெடுத்துவருகிறது. எனவே இங்கு கண்டுபிடிப்புகளுக்கு இருக்கும் தாக்கம்தெரிகிறது. இந்தியாவை சிறந்த கண்டுபிடிப்பு களுக்கான இடமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியாவின் வளர்ச்சி, மனிதநேயம், இயற்கை மேம்பாடு, விவசாயம், நீர் மேலாண்மை, எரி சக்தி, கழிவு மறு சுழற்சி மேலாண்மை, ஊட்டச் சத்து குறைபாடு நீக்கம் ஆகியவை மேம்படும் வகையிலான தலை சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.
ஐஐடி மற்றும் ஐஐடி மாணவர்களால் இந்தியா பெருமைகொள்கிறது. ஐஐடி-க்களின் வெற்றிதான் நாடுமுழுவதும் பல தொழில்நுட்பக் கல்லூரிகள் உருவாக காரணமாக அமைந்தது. இதனால் இந்தியாவில் இருந்து அதிகளவிலான தொழில் நுட்ப வல்லுநர்களை உருவாக்க முடிகிறது.
நம்முடைய சிறந்த கல்வித் திட்டம் தொடர்பான முழுப்பயன்களையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள். இங்கு இந்தியாவின் பலதரப்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் பின்புலன்கள் ஒன்று கூடுவதன் மூலம் ஒருவருடைய அறிவு மேம்படுகிறது. பலவற்றை எளிதில் கற்கமுடிகிறது.
இந்திய ஆய்வுக்கூடங்களில் இந்திய தொழில்நுட்ப மாணவர்களின் சிறந்த கண்டுபிடிப்புகள் வெளிவரவேண்டும். இவை அனைத்தும் எந்த அரசு அல்லது தனியார் கட்டடங்களில் இருந்து வருவதில்லை. சிறந்தகண்டுபிடிப்புகள் அனைத்தும் இதுபோன்ற கல்விக் கூடங்களில் இருந்து உங்களைப் போன்ற திறமையான இளைஞர்களின் மனங்களில் இருந்து வெளிப்படுகிறது .
மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விநிறுவனத்தின் (ஐஐடி) 56-வது பட்டமளிப்புவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியது:
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.