தமிழக மக்கள் மறுக்க முடியுமா? மறக்க முடியுமா?

டில்லியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் வாஜ்பாயின் இரங்கல் நிகழ்வுகளில் தந்தி டிவியில் பேட்டி கொடுத்த போது

வாஜ்பாய் அவர்களுக்கு திமுக என்றும் நன்றி கடன் பட்டுள்ளது காரணம்
"ஜெயலலிதா திமுக ஆட்சியை 356வது பிரிவை பயன்படுத்தி சட்டத்துக்கு புறம்பாக கலைக்க சொல்லி நெருக்கடி கொடுத்த போது வாஜ்பாய் 356 பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியை சட்டத்துக்கு புறம்பாக கலைக்க மாட்டோம் என்று வாஜ்பாய் உறுதியாக கூறிய காரணத்தால் தான் தனது மத்திய பாஜக ஆட்சியை இழந்தார்"

ஆனால் இன்று நினைவு கூர்ந்தவர்கள் அன்றைய கால கட்டத்தில் எப்படியெல்லாம் வாஜ்பாய் அவர்களுக்கு துரோகம் செய்து பாஜக மீண்டும் வெற்றி பெற்று வாஜ்பாய் மீண்டும் பிரதமர் ஆக விடாமல் திமுக தடுத்து வாஜ்பாய் அரசியல் வாழ்வை வீழ்த்தினார்கள் என்று நாம் நினைத்துபார்க்க வேண்டும்

ஜெயலலிதாவால் 13 மாத வாஜ்பாய் அரசு வீழ்த்திய பிறகு 1999 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக திமுக மதிமுக பாமக கூட்டணி வைத்து மீண்டும் தமிழகத்தில் 30 இடங்களில் வெற்றி பெற்றது.

அப்போது மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பாமகவுக்கு-2, மதிமுகவுக்கு-2, திமுக-5, நபர்கள் வீதம் மத்திய அமைச்சராக வாஜ்பாய் நியமித்தார்.

அந்த அமைச்சரவையில் முரசொலி மாறன் வர்த்தக துறை அமைச்சராக மூன்றரை ஆண்டுகள் இருந்துபோது நோய் வாய்ப்பட்ட நிலையில் அவருக்கு அனைத்து செலவுகளையும் வாஜ்பாய் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு மருத்துவம் பார்த்தும் முரசொலி மாறன் இறந்த விடுகிறார். அந்த நேரத்தில் உடனடியாக அவர் மகன் தயாநிதிமாறனுக்கு அதே மாதிரி பதவியை வாஜ்பாய் அவர்களிடம் கருணாநிதி கேட்டார்.

அதற்கு தேர்தலில் நின்று வெற்றி பெறாத ஒருவருக்கு மந்திரி சபையில் இடம் கொடுத்தால் இதையே காரணம் காட்டி நமது கூட்டணியில் உள்ள 24 கட்சிகளும் நெருக்கடி கொடுத்து தங்கள் கட்சியில் உள்ள எம்பி ஆகாதவர்களுக்கு எல்லாம் மத்திய மந்திரி பதவி கேட்பார்கள் அதனால் தற்சமயம் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி தர இயலாது.

அதைசமயம் உங்கள் திமுக எம்பி'யாக உள்ள இன்னோருத்தர் பெயர் கொடுங்கள் மத்திய மந்திரி பதவி தரலாம் என்று வாஜ்பாய் கூறினார்கள்

இதே கேட்டு கருணாநிதி எனது பேரனுக்கு மந்திரிசபையில் இடம் இல்லையா என்று கருணாநிதி ஆக்ரோஷமாக கோபத்தில் கொந்தளித்தார்!!

வாஜ்பாய் அத்வானி அவர்கள் இருவரும் எவ்வளவோ கருணாநிதியை சமாதானம் செய்து இன்னொரு திமுக எம்பிக்கு மந்திரி தருகிறோம் என்ற பேச்சுக்கு கருணாநிதி மரியாதை கொடுக்காமல் பாஜக கூட்டணியில் இருந்து விலகினார் கருணாநிதி.

இந்த நேரத்தில் காங்கிரஸ் திமுகவுக்கு செய்த மாபெரும் இடைஞ்சல்களான
1990ல் சந்திரசேகரை பயன்படுத்தி திமுக ஆட்சியை காங்கிரஸ் கலைத்ததை கருணாநிதியும் ஸ்டாலினும் மறந்து விட்டார்கள்.

மீண்டும்
1998ல் ராஜீவ் கொலையில் விடுதலை புலிகளுக்கு உதவியதாக புகார் தெரிவித்து திமுக ஆட்சியை ஜெயலலிதா கலைக்க காங்கிரசும் சேர்ந்து கொண்டு நாடாளுமன்றத்தில் அமளி செய்ததை கருணாநிதியும் ஸ்டாலினும் மறந்து விட்டார்கள்

திமுக 356 பிரிவை பயன்படுத்தி கலைக்க மாட்டோம் என்று கூறிய வாஜ்பாய் அவர்களுக்கு எதிராக போகலாமா என்று கூட எதையும் நினைத்து பார்க்காமல், காங்கிரஸ் கூட சமரசம் செய்து கொண்டு தனது பேரன் தயாநிதி, தனது மகன் அழகிரி, மேலும் தனது கட்சி எம்பிக்களுக்கு 6 முக்கிய இலக்காக கேட்டார்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு சம்பாதித்து விட்டார்கள்

திமுக முதுகில் குத்திய காங்கிரஸ் செய்த அனைத்து துரோகத்தையும் மறந்து காங்கிரஸ் கூட கூட்டணி உடன்படிக்கை செய்து கொண்டு வாஜ்பாய் முதுகில் குத்தினார் கருணாநிதி.

இதனால் மீண்டும் பாரத பிரதமராக வாஜ்பாய் ஆக முடியாத துரதிஷ்ட நிலை ஆனது. அதோடு வாஜ்பாய் அவர்களின் அரசியல் வாழ்வையை திமுக முடக்கிவிட்டது.

மீண்டும் 2004ல் வாஜ்பாய் ஆட்சியில் அமர்ந்து இருந்தார்கள் என்றால்
காவேரி பிரச்சனைக்கு அப்போதே வாஜ்பாய் தீர்வு கொண்டு வந்து இருப்பார்கள் .

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இறந்து இருக்க மாட்டார்கள்.

இதன் பின்விளைவுகள்
வாஜ்பாய் அமைத்த காவேரி மேலாண்மை வாரியத்தை காங்கிரஸ் கலைத்து.

இலங்கையில் ராஜிவ் படுகொலைக்கு பலிவாங்க போரை மறைமுகமாக காங்கிரஸ் தூண்டி விட்டு தமிழ் இனம் அழித்தது மன்மோகன் சிங் சோனியா காங்கிரஸ்.

காங்கிரஸ் 2004-2014 பத்தாண்டுகளில் தமிழக மீனவர்கள் 700க்கும் மேற்பட்டவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டு கொன்றனர்

இவ்வாறு காங்கிரஸ், தமிழக மக்கள் முதுகில் குத்தினார்கள் இதையெல்லாம் கருணாநிதி கண்டு கொள்ளவில்லை.

மீண்டும் 2014 ல் மீண்டும் வாஜ்பாயின் வழி தோன்றல் மோடி அவர்களின் நல்லாட்சி தமிழகத்தின் உதவி இல்லாமலே மத்தியில் ஆட்சி அமைந்து

தமிழக மக்கள் பாஜக கூட்டணிக்கு ஓட்டு போடாவிட்டாலும் அதையெல்லாம் பெரிது பண்ணாமல்

மோடி அவர்களின் மத்தியரசு
காவிரி மேலாண்மை ஆணையத்தை சுப்ரீம் கோர்ட் வழிகாட்ட வைத்து யாரும் அசைக்க முடியாத அளவுக்கு அமைத்தது.

இலங்கை தமிழர்கள் நல்வாழ்வுக்கும் தீர்வு கொண்டு வந்து ஒரு லட்சம் வீடுகள் கட்டி கொடுத்து அதோடு மருத்துவமனை, பள்ளிகூடம், அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய தொழில் பயிற்சி எல்லாம் மோடி அவர்கள் வழங்கி வருகிறார்கள், யாழ்ப்பாணம் தமிழர் குடியிருப்புகள் பகுதிக்கு இதுவரை எந்த இந்திய பிரதமரும் சென்றது இல்லை, மோடி அவர்கள் தான் முதன்முறையாக யாழ்ப்பாணத்திற்கு சென்று தமிழர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி செய்து இருக்கிறார்கள்

மோடி ஆட்சியில் தான் இலங்கை கடற்படையினர் அட்டூழியம் இல்லாமல் தமிழக மீனவர்கள் உயிர் பயம் இல்லாமல் கடலில் மீன்கள் பிடித்து நிம்மதியாக தொழில் செய்கிறார்கள்.

இன்று வாஜ்பாய் தமிழகத்திற்கு என்னனென்ன செய்ய கனவு கண்டார்களோ அதெல்லாம் அவரின் வாரிசு மோடி அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்.

இன்று வாஜ்பாய் அவர்கள் நம்மையெல்லாம் விட்டு பிரிந்து மறைந்து விட்டார்கள், இன்று வாஜ்பாய் அவர்களை திராவிட தலைவர்கள் எல்லாம் ஆக ஓகோ என்று புகழ்ந்து ஊடகங்களில் பேட்டி கொடுத்து தங்களை புனிதமான வாஜ்பாய் அவர்களுடன் நெருக்கமாக இருந்தது போல் காட்டி கொள்ள முற்படுகிறார்கள். அதே வேளையில் வாஜ்பாய் உயிரோடு இருக்கும் போது மேற்கண்ட இந்த துரோகம் எல்லாம் செய்து தான் வாஜ்பாய் ஆட்சியை வீழ்த்தினார்கள், வாஜ்பாய் அரசியல் வாழ்வை முடக்கினார்கள் என்பதை இன்றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

வாஜ்பாய் அவர்களோடு கூட்டணி வைத்து மந்திரிசபையில் இடம்பெற்று பலன் அடைந்தவர்கள் திராவிட கட்சிகள் எல்லாம் பிறகு கூட்டணியை முறித்து கொண்ட பிறகு

வாஜ்பாய் அவர்களை பண்டாரபரிதேசி என்றும்

வாஜ்பாயின் மூட்டு வழியை சுட்டிக்காட்டி சப்பாணி நடப்பது போல மேடையில் நடந்து காட்டி கேவலமாக எல்லாம் பேசிய பேச்சுக்கள் எவ்வளவு தெரியுமா?

இதையெல்லாம் தமிழக மக்கள் மறுக்க முடியுமா? மறக்க முடியுமா?

—————————————–
அன்றைய காலகட்டத்தில் பாஜக தேர்தல் களத்தில் நின்று நொந்து போன மன வேதனையுடன்
பழைய நினைவுலைகளை எழுதி உள்ளேன்.

வாஜ்பாய் அவர்களின் பிரிவில்
கண்ணீர்ருடன்

*எஸ்.நந்தகோபால்*,கோவை…
18.8.2018

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...