தி.மு.க. நடத்தும் நினைவேந்தல் கூட்டத்தில் நிதின் கட்காரி கலந்துகொள்கிறார்

மறைந்த திமுக. தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் தமிழ்நாட்டின் 5 நகரங்களில் “தலைவர் கலைஞரின் புகழுக்கு வணக்கம்” என்ற தலைப்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டுவருகிறது.

திருச்சியில் கடந்த 17-ந் தேதி “கருத்துரிமை காத்தவர் கலைஞர்” என்ற தலைப்பிலும், மதுரையில் 19-ந்தேதி “முத்தமிழ்வித்தகர் கலைஞர்” என்ற தலைப்பிலும், கோவையில் கடந்த 25-ந்தேதி “மறக்க முடியுமா கலைஞரை” என்ற தலைப்பிலும் நெல்லையில் நேற்று “அரசியல் ஆளுமை கலைஞர்” என்ற தலைப்பிலும் நினைவேந்தல் கூட்டங்கள் நடந்தன.
 

அடுத்து சென்னையில் வருகிற 30-ந்தேதி “தெற்கில் உதிக்கும் சூரியன்” என்ற தலைப்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் படி அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் தி.மு.க. சார்பில் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷாவையும் இரண்டு தி.மு.க. மூத்த தலைவர்கள் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அதை அமித்ஷா ஏற்றுக்கொண்டதாக . கூறி அமித்ஷா பெயருடன் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டன.

திமுக. நடத்தும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அமித்ஷா கலந்துகொள்கிறார் என்ற தகவல் பரவியதும், அது தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிக்கான அச்சாரம் என்று தகவல்கள் பரவியது. அமித் ஷாவின் வருகை தமிழக அரசியல் களத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் அமித்ஷா தி.மு.க. கூட்டத்தில் கலந்துகொள்வாரா என்பதில் மாறுபட்ட தகவல்கள் வெளிவந்தன. தமிழக பாஜக. தலைவர்கள் அனைவரும் இது பற்றி கூறுகையில், “அமித்ஷா வருகை பற்றி எங்களுக்கு அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை” என்றனர்.

இதனால் அமித்ஷா வருவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது தி.மு.க. நடத்தும் கூட்டத்துக்கு  மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்காரி பங்கு பெற இருப்பதை தி.மு.க. மூத்த தலைவர்கள் உறுதிப் படுத்தினார்கள்.

தமிழக பாஜக. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனிடம் இது தொடர்பாக கேட்டபோது, “அமித் ஷா வராத பட்சத்தில் வேறு யாராவது மூத்த தலைவர் வருவார்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “அரசியலில் மூத்த தலைவர் ஒருவரது நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கும், அரசியல் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.

கூட்டணிபற்றி தேர்தல் சமயத்தில்தான் முடிவு செய்யப்படும் என கூறிய டாக்டர் தமிழிசை, தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்பதை அரசியலாக்குவதை விரும்பவில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...