பாஜக முதல் மந்திரிகள் கூட்டம்: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா, பாஜக ஆட்சிசெய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் துணை முதல்வர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அடுத்தடுத்துவரும் தேர்தல் குறித்தும் 2019 ம் ஆண்டு வர உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப் படும் என்று கூறப்படுகிறது.

பாஜக-வுக்கு மொத்தமாக இந்திய அளவில் 15 முதல்வர்களும் 7 துணை முதல்வர்களும் இருக்கின்றனர். 

பிகார் மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் ஆளுங் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்திருக்கிறது. பிகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் நாகாலாந்தில் மக்கள் ஜனநாயக கட்சியுடனும் கூட்டணி வைத்துள்ளது பாஜக.

இந்தச் சந்திப்பின் போது, பாஜக முதல்வர்கள் தங்கள் அரசின் செயல்பட்டுவரும் விதம் குறித்தும், மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள் எந்தளவுக்கு அமல்படுத்தப் பட்டுள்ளது என்பது குறித்தும் மோடி மற்றும் அமித்ஷாவிடம் விளக்குவர் என்று தகவல் தெரிவிக்கப் படுகிறது. டெல்லியில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் 10 மணிநேரம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘இந்தச் சந்திப்பில், 2019 ம் ஆண்டு வரவுள்ள லோக் சபா தேர்தலுக்கு முதல்வர்களிடம் இருக்கும் திட்டம்குறித்தும் தேர்தலை அணுகுவது குறித்தும் கேட்டறியப்படும். அதே போல, எத்தனை மக்களவை தொகுதிகளில் வெற்றிபெற முடியும் என்ற கணிப்பையும் அவர்களிடமிருந்து பெறப்படும்’ என்று மூத்த பாஜக தலைவர் ஒருவர் நம்மிடம் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...