நாட்டுபற்று என்பது இதுதான்

"உண்மையான இந்தியனாக இத்தேசத் திற்காக பாடுபட்டால் உனக்கு 10 பைசா தேறாது, மாறாக கடும் அவமானங்களை சந்திக்கநேரும். அது எவ்வளவு பெரும் விஞ்ஞானியாக இருந்தாலும் சரி

ஆனால் தேசத்தை எதிர்த்து பிரிவினைபேசினால் அமெரிக்காவில் அழைத்து டாக்டர் பட்டம் கொடுப்பார்கள், ஜெர்மனில் அழைத்து விருந்து கொடுப்பார்கள், இட்சூ காரில் செல்லலாம், அமெரிக்க தூதர் சென்னையில் வீடு வந்து சந்திப்பார்" என்பதெல்லாம் இங்குள்ளவிதி

இந்நாட்டின் மாபெரும் சாபக்கேடு இது, தேச துரோகிகள் எல்லாம் அரசியல்வாதி, முற்போக்கு, புரட்சி இன்னபிற பெயரில் வாழ்வாங்கு வாழ்வார்கள். நாட்டுக்காய் உழைத்தவனோ எங்கோ இருந்து அழுது கொண்டிருப்பான்

இந்த இந்திய விதிக்கு அந்த பெரும் விஞ்ஞானியும் தப்பவில்லை, அவர் பெயர் நம்பி நாராயணன்

1995களில் மாலத்தீவு அழகிகள் வழியாக இந்திய விண்வெளி ரகசியத்தை கடத்தினார் என கேரளபோலிசாரால் கைது செய்யபட்டு, அடிக்கபட்டு கோர்ட்டில் நிறுத்தபட்டு சொல்லணா சித்திரவதைகளை சந்தித்து இன்று தன்கரங்களும், தன் மனமும் சுத்தமானது என உச்ச நீதிமன்றத்தில் நிரூபித்திருப்பவர்

தேசம் இன்று கண்ணீரொடு அவரை வணங்கி கொண்டிருக்கின்றது, நாட்டுபற்றாளர்கள் எல்லாம் அந்த மனிதனுக்காக கண்ணீரோடு கைதட்டிகொண்டிருக்கின்றார்கள்

நம்பி நாராயணன், நெல்லை மாவட்டத்து அறிவு சுடர். அப்பொழுதே மிக கடினமான விண்வெளி பாடங்களில் அசத்தி இஸ்ரோபக்கம் வந்தவர், அமெரிக்காவில் அவருக்கு மிக பெரிய எதிர்காலம் இருந்தபொழுதும், பிரான்ஸ் கம்பெனிகள் குனிந்து நின்று வரவேற்றபொழுதும் என் தேசம் இந்தியா, என் பணி இந்நாட்டிற்கே என வைராக்கியமாக இங்கே சேர்ந்தவர்

நிச்சயமாக சொல்லலாம், கலாம் போலவே அப்பழுக்கற்ற விஞ்ஞானி

ஆனால் என்ன நடந்தது?

அக்காலங்கள் இன்று ஈரானை குறிவைத்திருப்பது போல இந்தியாவினை முடக்கியே தீருவது என அமெரிக்கா கங்கணம் கட்டிய 1980கள், இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் முன்னேறி கொண்டிருந்தது அவர்களுக்கு பொறுக்கவில்லை

இந்தியா கிரையோஜெனிக் எந்திரத்தை வாங்க ரஷ்யாவிடம் முயற்சித்தது, காரணம் அதுதான் எடை கூடிய செயற்கைகோளை விண்ணுக்கு கொண்டுசெல்ல கூடிய தொழில்நுட்பம், கூடவே கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகனைகளையும் தயாரிக்கலாம்

விடுமா அமெரிக்கா 1980கள் அமெரிக்காவின் அட்டகாசம் உச்சத்தில் இருந்த காலம், இந்தியாவோ இந்திராவினை இழந்திருந்தது, ராஜிவினையும் தொடர்ந்து இழந்தது, சோவியத்யூனியனும் உடைந்தது

இந்தியாவிற்கு கிரையோஜெனிக் நுட்பம் கிடைக்காமல் குறி வைத்து அடித்தது அமெரிக்கா, ரஷ்யாவின் போரிஸ் எல்சினை மிரட்டியது, பிரான்ஸ் ஒதுங்கியது

இந்தியாவில் நாமே தயாரிப்போம் என விஞ்ஞானிகள் முடிவுசெய்தனர், அந்த குழுவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்தான் நம்பி நாராயணன்

கிரையோஜெனிக் நுட்பத்தினை அவர் அட்டகாசமாக வடிவமைத்தார், தொட்டுவிடும்தூரத்தில் வெற்றி காத்திருந்தது

(பின்னாளிலும் நம்பி நாராயணன் கொடுத்த அடித்தளத்தில்தான் இந்தியா கிரையோஜெனிக் எந்திரத்தை செய்து ஏராளமான செயற்கைகோளை எல்லாம் விண்ணுக்கு அனுப்பி கொண்டிருக்கின்றது)

விடுவார்களா வல்லரசுகள்?

மாலத் தீவின் இரு பெண்கள் சில நாட்டு உளவு அமைப்பு மூலம் தயார்செய்யபட்டு நம்பி நாராயணனை சிக்கலில் ஆழ்த்தினர், அவர் விண்வெளி ரகசியத்தை கடத்தினார், பாகிஸ்தானுக்கு விற்றார் என பெரும் குற்றசாட்டுகள் வெடித்தன‌

ஒரு பெரும் விஞ்ஞானியினை, அதுவும் உலகதரம் வாய்ந்த கிரையொஜெனிக் எஞ்சின்செய்யும் பெரும் விஞ்ஞானியின் மீதான குற்றசாட்டை மத்திய அரசு எவ்வளவு கவனமாக கையாண்டிருக்க வேண்டும்?

ஆனால் அன்றைய அரசு செய்யவில்லை, ஏன் என்று தெரியவில்லை. கண்டும் காணாமல் இருந்தார்கள். அப்பொழுதுதான் இந்தியா உலக நாடுகளுக்கு திறந்துவிடபட்டது. மன்மோகன் சிங்கினை உலகின் சிறந்த நிதி அமைச்சர் என்றேல்லாம் விருது கொடுத்தார்கள்

அதை ரசித்து கொண்டிருந்த மத்திய அரசு கொஞ்சமும் நம்பி நாராயணனை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் மகா கேவலம்

ஆம், ராஜிவிற்கு பின் இத்தேசம் அப்படி பன்னாட்டு சக்திகளிடம் சிக்கிகிடந்தது. நம்பி நாராயணன் அவமானபட்ட பொழுது மத்திய அரசு பார்த்து கொண்டிருந்ததே தவிர , ஒரு ஆறுதலும் சொல்லவில்லை

நம்பி நாராயணன் தன் தரப்பு நியாயத்தை சொல்லகூட வாய்ப்பு கொடுக்கபடவில்லை, நம்பி நாராயணை கைது செய்தது கேரளகாங்கிரஸ் அரசு, அதன் முதல்வர் அன்று கருணாகரன்

நம்பி நாராயணன் கடுமையாக தாக்கபட்டதும், பெரும் சித்திரவதைகளை கேரளபோலிஸ் கொடுத்ததும் இத்தேசத்தின் கருப்புபக்கங்கள்

நம்பி நாராயணன் உண்மையில் அப்பாவி, அவர்கள் குறி அவருக்கும் மேல் அதிகாரியான முத்துநாயகம் என்பவர் மேல் இருந்தது. அதாவது மொத்த இந்திய கிரையோஜனிக் திட்டத்தையும் முடக்க ஏதோ ஒருசக்தி கொடுத்த அழுத்ததிற்கு இத்தேசத்தின் அரசியல் ஆடியது

ஆயினும் கொஞ்சமேனும் நாட்டுபற்றாளர்கள் உள்ள தேசமல்லவா இது? எதிர்ப்புகிளம்பியது கேரளம் கொந்தளித்தது கருணாகரன் பதவி இழந்தார்

விஷயம் சிபிஐக்கு மாற்றபட்டது, சிபிஐ நம்பி நாராயணன் மேல் எந்த தவறும் இல்லை, இது கேரள காவல் துறையினரின் சதி என சொல்லிவிட்டது.

நம்பி நாராயணனுக்கு 1 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்கசொன்னது கோர்ட் ஆனால் கேரள அரசு கொடுக்கவில்லை. அவர்கள் 1 சொட்டு நீரே கொடுக்காத கேரள அரசு நஷ்டஈடா கொடுப்பார்கள்?

தன் மேல் தவறில்லை என்ற தீர்ப்பு வந்தவுடன் நிம்மதியான நம்பி நாராயாணன் கேரள காவல்துறைமேல் வழக்கு தொடர்ந்தார்

நேற்று உச்சநீதிமன்றம் கேரள அரசு செய்த முறையற்ற விஷயத்திற்காக, நம்பி நாராயணன் மீது செய்த கொடுமைக்காக 50 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும் என தீர்ப்பிட்டுள்ளது

இவ்வளவு நாளும் தான் நடத்திய போராட்டத்தில் வென்றிருகின்றார் நம்பி, அவரின் நேர்மை வென்றிருக்கின்றது

இப்பொழுது காரி துப்பி இத்தேசமக்கள் இந்திய அதிகார வர்க்கத்தை கேட்கும் கேள்வி ஒன்றுதான்

அமெரிக்கா சென்றால் பலபில்லியன்கள் சம்பாதிக்க வாய்பிருந்தும், வெறும் சில ஆயிரங்களுக்காக அம்மனிதன் இந்த நாட்டின் விண்வெளி திட்டத்தில் பங்கெடுத்திருக்கின்றார்

ஆனால் அடிப்படையற்ற குற்றசாட்டில் அவரை கைதுசெய்து அடித்தெல்லாம் இருக்கின்றார்கள், இதெல்லாம் ஏன் முதலிலே கண்டிக்கபடவில்லை

சரி சிபிஐ விசாரணை 1998ல் முடிந்தாலும் 2018வரை அவருக்கான நீதியினை கிடைக்கவிடாமல் செய்த சக்தி எது?

அவரின் பெரும் போராட்டத்தால் நிச்சயம் இந்திய விண்வெளிதுறை பின்னடைந்திருகின்றது, கிரையோஜெனிக் இஞ்ச்னினின் தொடக்கத்தில்தான் நாம் இருக்கின்றோம், இன்னும் முன்னேற வேண்டும்

ஒரு மாபெரும் விஞ்ஞானியினை 25 ஆண்டுகள் அழவைத்ததில் இத்தேசத்தின் விண்வெளி ஆராய்ச்சிக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டிருக்கின்றது?

இன்று ஓரளவு கிரையோஜெனிக் எஞ்சினை செய்து சாதிக்கின்றோம் என்றால் அதற்கு நம்பி நாராயணன் காரணம் என்பது யாருக்கு தெரியாது, அம்மனிதனுக்கான நீதி இவ்வளவு தாமதமா?

ஒரு மாபெரும் விஞ்ஞானிக்கே நீதி கிடைக்க செய்யாமல் தேச துரோகிகளால் லாபி செய்ய முடியும் என்றால் இத்தேசத்தில் என்ன நடக்கின்றது?

ஒரு நம்பி நாராயணன் அழுது முடித்திருக்கின்றார், இன்னும் எத்தனை பேர் அழுதுகொண்டிருப்பார்கள் என யாருக்கு தெரியும்?

50 லட்சம் நஷ்ட ஈடு என்பது ..கு சமம், அம்மனிதன் நாளையே விமானம் ஏறினால் 1 மணிநேரத்தில் அவன் காலடியில் அது கொட்டி கிடக்கும், அவரின் திறமை அப்படி

அந்த நஷ்ட ஈடு எல்லாம் போதாது

இத்தேசத்து மொத்த மக்களும், கட்சிகளும் அரசும், நீதிதுறையும், அந்த மனிதன் மேல் பழிசுமத்தும் பொழுது பார்த்து கொண்டிருந்த விண்வெளி அதிகாரிகளும் மொத்தமாய் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

அவருக்கு நல்ல பதவிகளை மறுபடியும் விண்வெளி மையத்தில் கொடுத்து பிராயசித்தம் தேடட்டும்

அவரை திட்டமிட்டு கைது செய்து அந்நிய நாட்டின் ஏவல் துறையான கேரள காவல்துறை அதிகாரிகளான மாத்யூஸையும்,ஜோசுவா என்பவனையும் பிடித்து திகாரில் அடைக்கட்டும்

எங்கள் அன்புக்கும் நன்றிக்கும் உரிய நம்பி நாராயணன் அவர்களே,

இத்தேசம் உங்களுக்கு செய்த மாபெரும் அநீதிக்காக இந்தியர்கள் உங்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்

இந்த அயோக்கியர்களுக்காகவும் அவர்கள் செய்த கொடுமைகளுக்காகவும் இத்தேசத்தையும் அதற்கு நீங்கள் ஆற்ற இருந்த கனவுகளையும் மறந்துவிடாதீர்கள்

மீண்டும் வாருங்கள், இன்னொரு கலாமாய் உங்களை இத்தேசம் வரவேற்கின்றது

கிரையோஜெனிக் விஷயங்களில் இத்தேசம் போக வேண்டிய தூரங்களை கடக்க உதவுங்கள்

எம் மாணவர்கள் உங்களை படிக்கட்டும், இத்தகைய சோதனைகளை கடந்தும் நாட்டிற்காக ஒருவன் உழைத்தான் என வரலாறு எழுதட்டும்

அவர்களில் இருந்து பல நம்பி நாராயணன்கள் உருவாகட்டும், தேசம் நிலைக்கட்டும்

இத்தேசத்தின் நலனுக்காக அந்நிய நாட்டு கைகூலிகளால் நீங்கள் பட்ட பெரும் அவமானம் துடைக்கபட்டிருகின்ற நேரத்தில் எழுந்து வாருங்கள்

தேசாபிமான மிக்கோர் உங்களுக்காக நன்றி கண்ணீர் விட்டு உங்களை வரவேற்கின்றோம்

இவரின் மருமகன் ரவி அருணன் சந்திராயன் திட்டத்தில் முக்கியமானவர், மாமனாருக்கு அநீதி என அவர் தேசத்திற்கான சேவையினை செய்யாமல் இல்லை

நாட்டுபற்று என்பது இதுதான்

(நெல்லை மாவட்டத்து தமிழனுக்கு 25 ஆண்டுகாலமாக பெரும் அநீதி நடந்தது, ஒரு குரலாவது இங்கு தமிழனுக்கு அநீதி என கேட்டதா என்றால் இல்லை

இதுதான் தமிழகத்து கட்சிகளின், தமிழனை காக்க உதித்தவர்களின் அரசியல் புத்தி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...