ராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலண்டே அந்தநாட்டு பத்திரிகைக்கு அளித்த பேட்டி பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறிய போது, "ரபேல் விவகாரத்தில் பிரான்சுவா ஹாலண்டே, பிரதமர் நரேந்திர மோடியை திருடர் என்று விமர்சித்துள்ளார். அவரது குற்றச்சாட்டை மோடி ஏற்றுக்கொள்கிறாரா, இல்லையா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ராகுலுக்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் வெளியிட்டபதிவில் கூறியிருப்பதாவது:
ஆட்சியில் இல்லாத விரக்தியில் ராகுல் காந்தியும், காங்கிரஸும் அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். பாஜக ஆட்சியில் ஊழல் இல்லை. அதே நேரம் ராகுல்காந்தி குடும்பத்தினர் அனைவரும் திருடர்கள்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியபோது, “பிரான்ஸின் டசால்ட் நிறுவனம் காங்கிரஸுக்கு லஞ்சம் அளிக்கவில்லை. அதனால்தான் ரபேல் ஒப்பந்தம் காங்கிரஸ் ஆட்சியில் கையெழுத்தாக வில்லை. நேஷனல் ஹெரால்டு ஊழல்வழக்கில் ராகுலும் அவரது தாயாரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். ராகுலின் தங்கை கணவர் மீது நிலமோசடி வழக்கு உள்ளது. இவை குறித்து ராகுல் மவுனம் காப்பது ஏன்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.